பெய்ஜிங்: பிரதமர் மோடி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை திட்டத்தை 'பிரிக்ஸ்' நாடுகள் ஏற்பதாகக் கூறியுள்ளார். வியாழக்கிழமை அன்று 13வது 'பிரிக்ஸ்' உச்ச மாநாட்டில் அவர் காணொளி வழியாகப் பங்கேற்றுப் பேசி னார். இதில் பேசிய சீன அதிபர் ஸி ஜின்பிங், உலகின் முக்கிய சக்தியாக 'பிரிக்ஸ்' நாடுகள், உருவெடுத்துள்ளன என்றார். எத்தகைய சிரமங்கள் ஏற்பட்டாலும் கூட்டு ஒத்துழைப்புடன் 'பிரிக்ஸ்' வலுவாகத் திகழும் என்றும் அவர் சொன்னார்.
பயங்கரவாத எதிர்ப்பு திட்டம்; பிரிக்ஸ் ஏற்பு
1 mins read
(இடமிருந்து) ரஷ்ய அதிபர் புட்டின், பிரதமர் மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங், தென் னாப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோ. படம்: நரேந்திர மோடி இணையத் தளம் -