இந்தியாவில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் நேற்று புதுடெல்லி போலிஸ் நிலையத்துக்கு முன்பு கூடி தலிபான் ஆட்சியை பாகிஸ்தான் ஆதரிப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் உளவுப் பிரிவின் தலைவர் லெப்டினெண்ட் ஜெனரல் ஃபாயிஸ் ஹமீதின் உருவப் படத்தை ஏந்தி அவர்கள் ஆர்ப்பரித்தனர். தலிபான் படையினர் உண்மையான ஆப்கானிஸ்தான்காரர்கள் அல்லர், ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்துக்கான புகலிடம் அல்ல உள்ளிட்ட வாசகங்களையும் அவர்கள் கையில் பிடித்திருந்தனர். படம்: ராய்ட்டர்ஸ்
தலிபான் ஆட்சிக்கு எதிர்ப்பு
1 mins read
-

