தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு

1 mins read
24dba7a4-0bee-4e8f-9e9f-ce8643dffcd2
-

சண்­டி­கர்: பஞ்­சாப் மாநி­லத்­தில் கொரோனா தடுப்­பூசி செலுத்­தாத அரசு ஊழி­யர்­க­ளுக்கு கட்­டாய விடுப்பு அளிக்­கப்­படும் என அம்­மா­நில அரசு வெள்­ளிக்­கி­ழமை அறி­வித்­துள்­ளது.

நோய்த் தொற்று பர­வலை தடுக்­கும் ஒரே ஆயு­த­மாக தடுப்­பூசி இருந்து வரு­கிறது. அதனால் மக்களை தடுப்பூசி போடுமாறு ஊக்குவிக்க பல்வேறு உத்திகள் கையாளப் படுகின்றன.

இந்­நி­லை­யில் பஞ்­சாப் அரசு வெளி­யிட்­டுள்ள அறி­விப்­பில்,"முதல் தவணை தடுப்­பூ­சி­கூட போட்டுக்­கொள்­ளாத பஞ்­சாப் மாநில அரசு ஊழி­யர்­க­ளுக்கு செப்­டம்­பர் 15ஆம் தேதி முதல் கட்­டாய விடுப்பு அளிக்­கப்­படும்.

"மருத்­துவ கார­ணங்­க­ளுக்­காக தடுப்­பூசி செலுத்­திக்­கொள்­ளா­த­வர்­க­ளுக்கு இது பொருந்­தாது," என தெரி­ விக்­கப்­பட்­டுள்­ளது.