கொவிட்-19 தொற்று பாதிப்பும் இறப்பும் கேரளாவில் உச்சம்

கொவிட்-19 தொற்று பாதிப்பும் இறப்பும் கேரளாவில் உச்சம்

1 mins read
b88750d3-5b18-4ab2-9927-e7171c9552c6
-

புது­டெல்லி: அன்­றாட கொவிட்-19 கிரு­மித்­தொற்று குறித்து மத்­திய சுகா­தா­ரத் துறை நேற்­றுக் காலை அறிக்கை வெளி­யிட்­டது. அதில், "நாடு முழு­வ­தும் சனிக்­கி­ழமை காலை 9 மணி வரை­யி­லான 24 மணி நேரத்­தில் 33,376 பேருக்கு புதி­தாக தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இத­னால் பாதிப்பு மொத்த எண்­ணிக்கை 3,32,08,330 ஆக உயா்ந்­துள்­ளது. தொற்று பாதிப்­பால் 308 பேர் உயி­ரி­ழந்­த­னர். இத­னால், மொத்த உயி­ரி­ழப்பு 4,42,317ஆக அதி­க­ரித்­துள்­ளது.

"32,198 பேர் தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர். இது­வரை மொத்­தம் 3,23,74,497 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். இத­னால், நோய்த் தொற்­றுக்கு சிகிச்சை பெற்று வரு­வோ­ரின் எண்­ணிக்கை 3,91,516ஆக உள்­ளது," என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நாட்­டி­லேயே கொரோனா பாதிப்பு அதி­க­முள்ள மாநி­ல­மான கேரளாவில் அன்­றாட பாதிப்­பும் இறப்­பும் தொடா்ந்து அதி­க­மா­கவே உள்­ளது. 24 மணி நேரத்­தில் 25,010 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்ட நிலை­யில் 177 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.