ஹைதராபாத்: நாட்டிலேயே முதன் முறையாக தெலுங்கானா மாநிலத்தில் ஆளில்லா சிறிய ரக வானூர்திகள் மூலம் கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்படுகிறது.
இத்திட்டத்தை மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார். இத்திட்டத்துக்கு 'வானில் இருந்து மருந்து' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அறவே போக்குவரத்து இல்லாத குக்கிராமங்களுக்கு இனி இந்த வானூர்திகள் மூலம் மருந்துகள், ரத்தம் ஆகியவற்றை அனுப்ப முடியும். பெண்கள் பாதுகாப்புக்கும் சுரங்கத் துறைக்கும் இந்த வானூர்திப் பயன்பாடு உதவும்," என்றார் நிகழ்ச்சியில் பேசிய தெலுங்கானா அமைச்சர் ராமாராவ்.
இந்தப் புதிய திட்டத்தின்கீழ், ஒவ்வொரு முறையும் ஆளில்லா வானூர்தி மூலம் 40 கிலோ எடையுள்ள மருந்துகள் அனுப்பப்படும். சுமார் 15 கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் மருந்துகளைக் கொண்டு சேர்க்க முடியும்.

