கோழிக்கோடு: விமானிகளின் தவற்றால் நிகழ்ந்த விபத்து

கோழிக்கோடு: விமானிகளின் தவற்றால் நிகழ்ந்த விபத்து

1 mins read
218c5686-9597-4d7e-9ecd-6fff5262f138
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கோழிக்­கோடு விமான விபத்­துக்­கான கார­ணம் குறித்து விசா­ரணை நடத்தி வந்த அமைப்பு நேற்று முன்­தி­னம் தனது அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது.

விமா­னத்தை தரை­யி­றக்­கும்­போது பின்­பற்­றப்­பட வேண்­டிய நிலை­யான வழி­காட்டு நெறி­மு­றை­களை விமானி பின்­பற்­ற­வில்லை என அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

விபத்து ஏற்­பட இதுவே முதன்­மைக் கார­ண­மாக கூறப்­பட்­டுள்­ளது.அதே­ச­ம­யம் தொழில்­நுட்பக் கோளா­றும் இந்த விபத்து ஏற்­பட ஒரு கார­ணி­யாக இருந்­தி­ருக்­க­லாம் என்­றும் அதைப் புறக்­க­ணித்­து­விட முடி­யாது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்­தாண்டு ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­க­ளி­லி­ருந்து 191 பய­ணி­க­ளு­டன் வந்த ஏர் இந்­தியா விமா­னம் கோழிக்­கோடு விமான நிலை­யத்­தில் தரை­யி­றங்­கிய போது, ஓடு­த­ளத்­தில் இருந்து விலகி விபத்­துக்­குள்­ளா­னது. ஓடு­பா­தை­யை­யும் கடந்து சென்று, அதன் முடி­வில் இருந்த பள்­ளத்­தில் கவிழ்ந்­த­தில் விமா­னம் இரண்­டாக உடைந்­தது.

இவ்விபத்­தில் இரு விமா­னி­கள் உட்­பட 21 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். 'விமான விபத்­துக்­கான விசா­ரணை அமைப்பு' இது­கு­றித்து விரிவான விசா­ரணை மேற்கொண்டு இப்போது அறிக்கை அளித்­துள்­ளது.