விரைவில் செயல்பாட்டுக்கு வரும் தேசிய புலனாய்வு வலைப்பின்னல்

விரைவில் செயல்பாட்டுக்கு வரும் தேசிய புலனாய்வு வலைப்பின்னல்

2 mins read
f4787f36-20fd-425d-a186-9e26beb804ba
-

பயங்கரவாதச் செயல்பாடுகளை முறியடிப்பதில் மத்திய அரசு தீவிரம்

புது­டெல்லி: பயங்­க­ர­வாத செயல்­பா­டு­களை முன்­கூட்­டியே முறி­ய­டிக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வும் வகை­யில் தேசிய புல­னாய்வு வலைப்­பின்­னல் விரை­வில் செயல்­பாட்­டுக்கு வரும் என மத்திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இதன் மூலம் நாட்­டில் உள்ள அனைத்து புல­னாய்வு அமைப்பு­களும் பல்வேறு முக்­கிய தக­வல்­க­ளைப் பரி­மா­றிக்கொள்­வ­து­டன், ஒருங்­கி­ணைந்து பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள இய­லும். மேலும், மாநில உள­வுப்­பிரிவு­கள் சேக­ரிக்­கும் தக­வல்­களும் பர­வ­லாகப் பகி­ரப்­படும்.

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்­பர் 26ஆம் தேதி மும்­பை­யில் தீவி­ர­வா­தி­கள் நடத்­திய தாக்­கு­த­லில் 166 பேர் பலி­யா­கி­னர். இந்­தி­யா­வுக்­குள் ஊடு­ரு­விய லஷ்­கர்-இ-தொய்பா தீவி­ர­வா­தி­கள் திட்­ட­மிட்டு நடத்­திய இத்­தாக்­கு­தல் குறித்து முன்­கூட்­டியே புல­னாய்வு அமைப்­பு­கள் மத்­திய அரசை எச்­ச­ரிக்­க­வில்லை.

அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த டேவிட் ஹெட்லே தான் மும்­பை­யில் தாக்­கு­தல் நடத்­து­வ­தற்­கான திட்­டத்தை தீட்­டி­யுள்­ளான். மும்பை மாந­க­ரம் குறித்து அனைத்து முக்­கிய தக­வல்­க­ளை­யும் தீவி­ர­வா­தி­க­ளுக்­காகத் திரட்­டி­ய­து­டன், தாக்­கு­தல் நடத்­து­வ­தற்­கு­ரிய இடங்­க­ளை­யும் ஹெட்லே தான் தேர்வு செய்­த­தா­கக் கூறப்­பட்­டது.

கடந்த 2006 முதல் 2009 வரை டேவிட் ஹெட்லே பல­முறை இந்தியா­வுக்கு வந்து சென்ற நிலை­யில், மும்­பைத் தாக்­கு­தல் அரங்­கே­றும் வரை அவன் மீது எந்­த­வித சந்­தே­க­மும் புல­னாய்வு அமைப்­பு­க­ளுக்கு எழ­வில்லை. இத­னால் புல­னாய்வு அமைப்­பு­க­ளின் கட்­ட­மைப்பை நவீனப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­யம் என பாது­காப்­புத்­துறை நிபு­ணர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

இதை­ய­டுத்து தேசிய புல­னாய்வு வலைப்­பின்­னல் ஒன்றை உரு­வாக்க அப்­போ­தைய மத்­திய அரசு முடிவு செய்­தது. இதற்­காக 2010ஆம் ஆண்டு ரூ.3,400 கோடி நிதி ஒதுக்­கப்­பட்­டது. எனி­னும் அடுத்த இரண்டு ஆண்­டு­களில் இப்பணி­யில் தொய்வு ஏற்­பட்­ட­து.

இந்­நி­லை­யில், 2014ஆம் ஆண்டு இதற்­கான பணி­கள் மீண்­டும் முழு வீச்­சில் தொடங்­கின. இப்­போது அனைத்­துப் பணி­களும் முடி­வ­டைந்து, இத்­திட்­டம் செயல்­பாட்­டுக்கு வர உள்­ளது என்­றும் கொரோனா நெருக்­கடி தலை­தூக்­கா­மல் இருந்­தி­ருந்­தால் முன்பே தேசிய புல­னாய்வு வலைப்­பின்­ன­லின் சேவை தொடங்கி இருக்­கும் என்றும் மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா தெரி­வித்­துள்­ளார்.

தேசிய புல­னாய்வு வலைப்­பின்­ன­லில், நாட்­டின் அனைத்து குடி­மக்­கள், வெளி­நாட்­டில் இருந்து இந்­தியா வரு­ப­வர்­கள் என அனை­வ­ரது தக­வல்­களும் இடம்­பெற்­றி­ருக்­கும். யார், எங்கே உள்­ள­னர், யாரை எவ்­வாறு தொடர்பு கொள்­கின்­ற­னர் என அனைத்து விவ­ரங்­களும் சேக­ரிக்­கப்­படும். அவற்றை புல­னாய்வு அமைப்­பு­கள், மாநில உள­வுப் பிரி­வி­னர் பயன்­படுத்­த­லாம். சந்­தேக நபர்­கள் மீதான கண்­கா­ணிப்பு எளி­தா­கும்.

மிக விரை­வில் இந்த புல­னாய்வு வலைப்­பின்­னலை பிர­த­மர் மோடி நாட்­டுக்கு அர்ப்­ப­ணிக்க இருப்­பதா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், இந்­தப் புதிய வலைப்­பின்­னல் தனி நபர் சுதந்­தி­ரத்­துக்கு பதிய அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுத்­துள்­ளது என ஒரு தரப்­பி­னர் எதிர்ப்பு தெரி­வித்­துள்­னர்.

தனி நபர்களைப் பற்­றிய தக­வல்­களைச் சேக­ரிப்­ப­து­டன் அவர்­க­ளு­டைய தொலை­பேசி உரை­யா­டல்­க­ளை­யும் இந்த வலைப்­பின்­னல் மூலம் ஒட்­டுக்­கேட்க முடி­யும் என்­பதை ஏற்க இய­லாது என அத்­த­ரப்பு தெரி­வித்­துள்­ளது.