உத்தரப் பிரதேச தேர்தல்: தலைமையேற்கும் பிரியங்கா

உத்தரப் பிரதேச தேர்தல்: தலைமையேற்கும் பிரியங்கா

1 mins read
dc55c8d7-17a0-4a9c-9d91-384b5b6ef855
-

புது­டெல்லி: அடுத்த ஆண்டு நடை­பெற உள்ள உத்­த­ரப் பிர­தேச மாநில சட்­டப்­பே­ர­வைத் தேர்­தலை காங்­கி­ரஸ் கட்சி, பிரி­யங்கா காந்தி தலை­மை­யில் எதிர்­கொள்­ளும் என அக்­கட்­சி­யின் மூத்த தலை­வர் சல்­மான் குர்­ஷித் தெரி­வித்­துள்­ளார்.

இத்­தேர்­த­லில் எந்­தக் கட்­சி­யு­ட­னும் காங்­கி­ரஸ் கூட்­டணி அமைக்­காது என்று அவர் திட்­ட­வட்­ட­மாக குறிப்­பிட்­டுள்­ளார்.

"பிரி­யங்கா காந்தி தலை­மை­யில்­தான் காங்­கி­ரஸ் தேர்­தலை எதிர்­கொள்­ளும். கட்சி வெற்றி பெறு­வதை உறுதி செய்ய வேண்­டும் என்­ப­தற்­காக அவர் கடு­மை­யாக உழைத்து வரு­கி­றார்.

"ஒரு­வேளை யார் முதல்­வர் வேட்­பா­ளர் என்­பதை அவர் பின்­னர் அறி­விக்­கக்­கூ­டும்," என்று சல்­மான் குர்­ஷித் கூறி­யுள்­ளார்.

காங்­கி­ரஸ் கட்­சி­யின் தேர்­தல் அறிக்­கை­யா­னது, சாமா­னிய மக்­க­ளின் குர­லாக ஒலிக்­கும் என்று குறிப்­பிட்ட அவர், விவ­சா­யி­கள், பெண்­க­ளின் நலன் ஆகி­ய­வற்­றில் அதிக கவ­னம் செலுத்­தப்­படும் என்­றார்.