புதுடெல்லி: முன்னாள் மத்திய போக்குவரத்து அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ் (படம்) கால மானார். அவருக்கு வயது 80.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவருக்கும் நெருக்கமானவராக அறியப்பட்ட அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றியவர். ஐந்து முறை மக்களவையிலும் இருமுறை மாநிலங்களவையிலும் எம்பியாகப் பணியாற்றி உள்ளார்.
அண்மையில் ஆஸ்கார் ஃபெர்னாண்டசுக்கு தலையில் அடிபட்டது. பின்னர் மூளையில் ரத்தம் உறைந்திருந்ததை அடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில், அது பலனளிக்காமல் அவர் நேற்று காலமானார்.

