ஒடிசாவை புரட்டிப் போட்ட 87 ஆண்டுகளில் இல்லாத அடைமழை

40 மணிநேரம் விடாமல் நீடித்தது: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; மின்சாரம் துண்டிப்பு

பெங்­க­ளூரு: ஒடி­சா­வில் பெய்து வரும் கன­மழை கார­ண­மாக அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி உள்­ளது. கடந்த 87 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு கடந்த இரண்டு தினங்­களில் மட்­டும் அம்­மா­நி­லத்­தில் சுமார் 30 சென்­டி­மீட்­ட­ருக்­கும் அதி­க­மான மழை பதி­வாகி உள்­ளது.

செவ்­வாய்க்­கி­ழமை (நேற்று) காலை நில­வ­ரப்­படி, அங்கு நாற்­பது மணி நேரத்­தை­யும் கடந்து தொடர்ந்து இடை­வி­டா­மல் பெய்த மழை­யால் அம்­மா­நி­லத்­தில் உள்ள பெரும்­பா­லான ஆறு­களில் நீர்­மட்­டம் அபாய அளவை கடந்துவிட்டதாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே கரை­யோ­ரங்­களில் வசிப்­ப­வர்­களை அப்­பு­றப்­ப­டுத்­தும்­படி மாவட்ட ஆட்­சி­யர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

மழை தொடர்­பான வெவ்­வேறு சம்­ப­வங்­களில் இது­வரை மூன்று பேர் பலி­யா­கி­விட்­ட­னர். இந்த எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது. ஒடி­சா­வின் 13 மாவட்­டங்­க­ளுக்கு கன­ம­ழைக்­கான சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டது.

உலகப் புகழ்­பெற்ற ஜெகன்­நா­தர் கோவில் அமைந்­துள்ள பூரி மாவட்­டத்­தில் இது­வரை 34.1 சென்­டி­மீட்­டர் மழை பதி­வாகி உள்­ளது.

மாநி­லம் முழு­வ­தும் தாழ்­வான பகு­தி­களை வெள்ள நீர் சூழ்ந்­துள்­ளது. ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளைப் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தும் பணி­களில் தேசிய பேரி­டர் மீட்­புப் படை­யி­ன­ரும் மாநில மீட்­புக்­கு­ழு­வி­ன­ரும் ஈடு­பட்­டுள்­ள­னர்.

ஒடி­சா­வில் நேற்று காலை 8.30 மணி நில­வ­ரப்­படி, அதற்கு முந்­தைய 24 மணி நேரத்­தில், 17 இடங்­களில் 20 சென்­டி­மீட்­ட­ரும், இரண்டு இடங்­களில் 30 சென்­டி­மீட்­ட­ரு­மாக மழை பதி­வாகி உள்­ளது என இந்­திய வானிலை மையம் தெரி­வித்­துள்­ளது. 15 இடங்­களில் 20 முதல் 30 சென்­டி­மீட்­டர் வரை மழை பெய்­துள்­ள­தாக ஒடிசா சிறப்பு நிவா­ரண ஆணை­யர் பி.கே.ஜெனா உறுதி செய்­துள்­ளார்.

திங்­கட்­கி­ழமை மாலை வரை சுமார் நான்­கா­யி­ரம் பேர் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்புறப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில், அன்று இரவு முழு­வ­தும் கன­மழை கொட்­டித் தீர்த்­தது.

பைதா­ரானி, வன்­ச­தரா, ஜலாகா உள்­ளிட்ட மூன்று முக்­கிய ஆறு­க­ளி­லும் வெள்ள நீர் அபாய அள­வைக் கடந்து ஓடு­கிறது. மேலும், மாநிலம் முழு­வ­தும் உள்ள சிறிய ஆறு­கள், குளங்­கள், குட்­டை­கள் என அனைத்து நீர் ஆதா­ரங்­களும் நிரம்பி உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நூற்­றுக்­க­ணக்­கான வீடு­கள் சேத­ம­டைந்­துள்­ளன. ஏரா­ள­மான கிரா­மங்­களில் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் பல முக்­கிய சாலை­கள் சேத­ம­டைந்­துள்­ள­தால் பல கிரா­மங்­கள் பிற பகு­தி­களில் இருந்து துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

ஏரா­ள­மான விளை நிலங்­களும் மழை நீரில் மூழ்கி உள்­ள­தாக கூறப்­படும் நிலை­யில், ஒடி­சா­வின் வடக்கு கட­லோ­ரப் பகு­தி­யில் உரு­வா­கி­யுள்ள தீவிர காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­லம் வட­கி­ழக்கு திசை­யில் நகர்­வ­தா­க­வும் அடுத்த கட்­ட­மாக வடக்கு சத்­தீஸ்­கர், மத்­திய பிர­தே­சம் இடையே அது வலு­வி­ழக்­கும் என்­றும் வானிலை ஆய்வு மையம் கணித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!