கேரளா, மகாராஷ்டிராவில் பாதிப்பு குறைந்தது

கேரளா, மகாராஷ்டிராவில் பாதிப்பு குறைந்தது

2 mins read
3aedbb9a-93a4-476e-b8dc-8ba44f9d23e9
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் செவ்­வாய்க்­கி­ழமை (நேற்று) காலை 10 மணி­யு­டன் முடி­வ­டைந்த முந்­தைய 24 மணி நேரத்­தில் புதி­தாக 25,404 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகி உள்­ள­னர். ஒரே நாளில் மேலும் 339 பேர் பலி­யா­கி­விட்­ட­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இது­வரை உயி­ரி­ழந்­தோ­ரின் மொத்த எண்­ணிக்கை 443,213ஆக கூடி­யுள்­ளது. திங்­கட்­கி­ழமை ஒரே நாளில் 37,127 பேர் குண­மடைந்துள்­ள­னர்.

நேற்றை நில­வ­ரப்­படி, நாடு முழுவ­தும் 362,207 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். இது­வரை சுமார் 760 மில்­லி­யன் பேருக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

கேர­ளா­வில் தொற்­றுப்­பா­திப்பு அதி­க­ரித்து வந்த நிலை­யில், நேற்று முன்­தி­னம் அன்­றாட பாதிப்பு குறை­வாக இருந்­தது.

செவ்­வாய்க்­கி­ழமை காலை வரை­யி­லான நில­வ­ரப்­படி, முந்தைய 24 மணி நேரத்­தில் புதி­தாக 15,058 பேருக்கு கிருமி தொற்­றியது உறுதி­யாகி உள்­ளது. ஒரே நாளில் 99 பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

மகா­ராஷ்­டி­ரா­வில் கடந்த ஏழு மாதங்­களில் ஆகக்­கு­றை­வாக அன்­றாட பாதிப்பு எண்­ணிக்கை பதி­வா­னது. திங்­கட்­கி­ழமை அங்கு புதி­தாக 2,740 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது. கடந்த 219 நாள்­களில் இதுவே ஆகக்­கு­றைந்த எண்­ணிக்­கை­யா­கும். மேலும், 190 நாள்­களில் ஆகக்­கு­றை­வாக 27 கொரோனா இறப்­பு­கள் மட்­டுமே பதி­வா­கின.

இதற்­கி­டையே, தெலுங்­கானா­வில் தடுப்­பூசி போடும் பணி நட­வ­டிக்கை வேகம் எடுத்­துள்­ளது. அங்கு நாள்­தோ­றும் 300,000 தடுப்­பூ­சி­கள் போட இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அங்கு 18 வயதைக் கடந்த 28 மில்­லி­யன் பேர் உள்­ள­னர். இது­வரை 14.2 மில்­லி­யன் பேருக்கு முதலாவது தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.