பஹ்ரைனில் ஆந்திர மக்கள்: மீட்கக் கோரிக்கை

பஹ்ரைனில் ஆந்திர மக்கள்: மீட்கக் கோரிக்கை

1 mins read
293c8496-43e3-4c51-9d62-0f833aa0dd27
-

அமராவதி: ஆந்திராவைச் சேர்ந்த ஏராளமானோர் பஹ்ரைனில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவிப்பதாகவும் அவர்களை மீட்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அனுப்பி உள்ள கடிதத்தில், அந்நாட்டில் பணியாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த பலருக்கு விசா காலம் முடிந்துவிட்டது என்றும் பலர் வேலையின்றி அவதிப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், பஹ்ரைனில் இருந்து நாடு திரும்ப காத்திருப்போரின் பட்டியலையும் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளதாக முதல்வர் ஜெகன்மோகன் கூறியுள்ளார்.