பிரதமர் மோடி, முதல்வர் மம்தா செல்வாக்குமிக்க தலைவர்கள்

பிரதமர் மோடி, முதல்வர் மம்தா செல்வாக்குமிக்க தலைவர்கள்

1 mins read
500dac3d-9e7e-4fa1-a6ed-cd0b622f04ee
-

புது­டெல்லி: உல­கின் செல்­வாக்கு மிகுந்த 100 தலை­வர்­கள் பட்­டி­ய­லில் இந்­தி­யப் பிர­த­மர் மோடி, மேற்கு வங்­காள முதல்­வர் மம்தா ஆகி­யோரும் இடம்­பெற்­றுள்­ள­னர்.

தடுப்­பூசி தயா­ரிப்­பில் முன்­ன­ணி­யில் இருக்­கும் இந்­தி­யா­வின் சீரம் நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி அதாரி பூன­வாலா­வும் உலக அள­வில் செல்­வாக்கு ­மிக்­க­வர்­களில் ஒரு­வ­ராகத் திகழ்­கிறார்.

அமெ­ரிக்­கா­வின் டைம்ஸ் சஞ்சிகை 2021 ஆம் ஆண்­டிற்­கான செல்­வாக்குமிக்க 100 நபர்­க­ளின் பட்டி­யலை வெளி­யிட்­டுள்­ளது.

அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், துணை அதி­பர் கமலா ஹாரிஸ், சீன அதி­பர் ஜின்­பிங், இங்­கி­லாந்து இள­வ­ரச தம்­பதி ேஹரி-மேகன், அமெ­ரிக்க முன்­னாள் அதி­பர் டிரம்ப் உள்­ளிட்­டோ­ரும் பட்டியலில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

"ஆணா­திக்­கச் சமூ­கத்­தில் தனது திறமையை மெய்ப்­பித்­த­வர், அச்­ச­மில்­லாத அர­சி­ய­லின் முகம்," என்று முதல்­வர் மம்­தாவை டைம்ஸ் வர்­ணித்­துள்­ளது.