இரண்டு ஏழை பள்ளி மாணவர்கள் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி

இரண்டு ஏழை பள்ளி மாணவர்கள் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி

1 mins read
90482bff-7e41-4eac-8ef1-7c92bc873487
-

பாட்னா: பீகார் மாநிலம் கட்ஹார் மாவட்டம் பாஸ்டியா கிராமத்தைச் சேர்ந்த குருசந்திர விஸ்வாஸ், அஷிஷ்ட் குமார் என்ற இரு ஏழை மாணவர்களின் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு இருந்ததை அடுத்து விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

அந்த இரு மாணவர்களும் தங்களுக்கான பள்ளிச் சீருடைக்காக அரசு எவ்வளவு ரூபாய் தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது என்பதைப் பார்க்க வங்கிக்குச் சென்றபோது அது தெரிய வந்தது. பணத்தை யாரும் எடுக்க முடியாதபடி கணக்கு கள் முடக்கப்பட்டு உள்ளன.

விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறின.

பீகாரில் அண்மையில் ரஞ்சித் தாஸ் என்பவர் தன் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட 5.5 லட்சம் பணத்தை எடுத்து, பிரதமர் தனக்குக் கொடுத்ததாகக் கருதி செலவழித்துவிட்டார்.