2020ல் 398 வன்செயல் சம்பவங்கள்; தேசவிரோத சக்திகள் காரணம்

2020ல் 398 வன்செயல் சம்பவங்கள்; தேசவிரோத சக்திகள் காரணம்

2 mins read
f3f0f635-1b77-41a9-9bf2-c6c7bb6c8d83
பொது சொத்துகளைச் சேதப்படுத்தியதன் தொடர்பில் 2020ல் 6,000க்கும் மேற்பட்டவர்கள் கைதாயினர். படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் சென்ற ஆண்­டில் தேச­வி­ரோத சக்­தி­கள் 398 வன்­செ­யல்­களை அரங்­கேற்றி­ய­தாக தேசிய குற்­றச்­செ­யல் பதிவு இலா­கா­வின் அறிக்கை தெரி­வித்­துள்­ளது. அவற்­றில் 240 சம்­பவங்­களுக்கு இட­சாரி தீவி­ர­வா­தி­கள் கார­ணம்.

ஜிஹாத் பயங்­க­ர­­வா­தி­கள் 76 வன்­செ­யல்­களை அரங்­கேற்­றி­னர் என்­றும் வட­கி­ழக்குக் கல­கக்­காரர்­கள் 45 வன்­செ­யல்­க­ளுக்­குப் பொறுப்பு என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. இதர பயங்­க­ர­வா­தி­கள் 37 சம்­ப­வங்­க­ளுக்­குக் கார­ணம் என்று 'இந்­தி­யா­வில் குற்­றச்­செ­யல்­கள்' என்ற தலைப்­பி­லான அந்த அறிக்கை குறிப்­பிட்­டுள்­ளது.

சென்ற ஆண்­டில் நிகழ்ந்த இத்­தகைய சம்­ப­வங்­களில் குடிமக்­களில் 80 பேர், பாது­காப்­புப் படை­யி­னர் 73 பேர் கொல்­லப்­பட்டதாக அறிக்­கையை மேற்­கோள்­காட்டி டைம்ஸ் ஆஃப் இந்­தியா தெரிவித்­துள்­ளது.

அதே­வே­ளை­யில், தீவிர கம்­யூ­னிஸ்­டு­கள் 55 பேரும் ஜிஹாத் பயங்­க­ர­வா­தி­கள் 82 பேரும் இதர பயங்­க­ர­வா­தி­கள் 37 பேரும் கொல்­லப்­பட்­ட­னர். கொல்லப்பட்ட தீவிர கம்யூனிஸ்டுகளில் ஒன்பது பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஹாத் பயங்கரவாதிகள் தொடர்பான 91 வன்செயல்கள் பற்றி பதியப்பட்டன என்றும் அவற்றில் பெரும்பாலானவை ஜம்மு காஷ்மீரில் அரங்கேற்றப்பட்டதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.

இந்­தச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 2019ல் பதி­வான அளவை­விட 35 விழுக்­காடு கூடு­தல் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­தச் சம்­ப­வங்­களில் 70 வன்­செ­யல் தாக்­கு­தல்­கள் போலிஸ் நிலை­யங்­களை அல்­லது ராணுவ முகாம்­களை குறி­வைத்து நடத்­தப்­பட்­டன. இட­சாரி தீவி­ர­வா­தி­க­ளைப் பொறுத்தவரை, சென்ற ஆண்­டில் மொத்­தம் 441 சம்­ப­வங்­கள் பற்றி புகார்­கள் பதி­யப்­பட்­டன.

மொத்தம் 554 மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர். அவர்களில் 327 பேர் தாங்களாகவே சரணடைந்தவர்கள் என்று அறிக்கை குறிப்பிட்டது.

சென்ற ஆண்­டில் வட­கி­ழக்கு கல­கக்­கா­ரர்­கள் 45 தாக்­கு­தல்­களை அரங்­கேற்­றி­னார்­கள் என்­றும் அவர்­களில் 46 பேர் பிடி­பட்­ட­தா­க­வும் அறிக்கை தெரிவித்தது.