10% பணக்காரர்களிடம் 50% சொத்து

10% பணக்காரர்களிடம் 50% சொத்து

1 mins read
0b12eee1-f71e-4c0c-815f-64270ca0fadb
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் உள்ள 10% பணக்­கா­ரர்­க­ளி­டம் நாட்­டின் ஒட்­டு­மொத்த சொத்­தில் பாதி (50%) சொத்­து­கள் இருப்­ப­தாக தேசிய மாதிரி கணக்­கெ­டுப்பு அமைப்பு (என்­எஸ்­எஸ்) நடத்­திய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

இதன் தொடர்­பிலான புள்­ளி­வி­வர அறிக்­கையை அந்த அமைப்பு வெளி­யிட்­டுள்­ளது.

நகர்ப்­புற பகு­தி­களில் 55.7% சொத்­து­ 10% பணக்­கா­ரர்­களிடம் உள்­ளன. அவர்­கள் வசம் கிராமப்­ ப­கு­தி­களில் உள்ள சொத்து­ 50.8% என்று அந்த அறிக்கை தெரி­விக்­கிறது.

மிக­வும் கீழ்­நி­லை­யில் உள்ள ஏழை­க­ளி­டம் இருக்­கும் சொத்­து­களின் அளவு ஒட்­டு­மொத்த சொத்தில் 5% கூட­இல்லை.

நிலம், வாக­னங்­கள், கட்­டடங்­கள், இயந்­தி­ரங்­கள், விவ­சாய சாத­னங்­கள், கால்­ந­டை­கள், பங்­குச்­சந்தை முத­லீ­டு­கள், வங்­கி­ மு­த­லீடு­கள் ஆகி­ய­வற்றைக் கணக்­கில் கொண்டு தேசிய மாதிரி கணக்­கெ­டுப்பு அமைப்பு சொத்­துப்­பட்­டி­யலை உரு­வாக்கி உள்­ளது.

கிராமப் பகு­தி­களில் ஒட்­டு­மொத்­த­மாக உள்ள ரூ.238.1 லட்சம் கோடி சொத்­தில் ரூ.132.5 லட்­சம் கோடி சொத்­து­ 10% பணக்­கா­ரர்­களி­டம் இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

டெல்லி நகரப் பகுதிகளில் 67.9% சொத்து 10% பணக்காரர் களிடம் உள்ளன. 50% ஏழைகளிடம் 3.5% சொத்து மட்டுமே உள்ள தாக அறிக்கை கூறியுள்ளது.

மகாராஷ்டிராவில் நகர்ப்புற பகுதிகளில் 10% பணக்காரர்களிடம் 61.4% சொத்து உள்ளது. அதேபோல மகாராஷ்டிராவில் 50% ஏழைகளிடம் இருக்கும் சொத்து 5%தான் என்று கூறப்பட்டுள்ளது.