2020ல் அன்றாடம் 77 பாலியல் வன்கொடுமைகள்; முதலிடத்தில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம்

2020ல் அன்றாடம் 77 பாலியல் வன்கொடுமைகள்; முதலிடத்தில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம்

2 mins read
4b5cbfce-d4f0-4c2f-b44e-0daf5e2393ec
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கடந்த 2020ஆம் ஆண்­டில் அன்­றா­டம் சராசரி­யாக 77 பாலி­யல் வன்­கொடு­மைச் சம்­ப­வங்­கள் பதிவு செய்­யப்­பட்டு உள்­ள­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

பெண்­க­ள் பாதிக்கப்பட்ட மொத்த சம்­ப­வங்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 25,498 பேர் 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள். 2,655 பேர் சிறு­மி­கள் என்று அரசு அறிக்கை குறிப்பிட்டு உள்­ளது.

மத்­திய உள்­துறை அமைச்­சின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவ­ணக் காப்­ப­கம், பெண்­க­ளுக்கு எதி­ராக 2020ம் ஆண்டு பதிவு செய்­யப்­பட்ட வழக்­கு­க­ளின் விவ­ரங்­களை வெளி­யிட்டு இருக்­கிறது.

அதன்­படி பெண்­க­ள் பாதிக்கப் பட்டதாக கடந்த ஆண்டு மொத்­தம் 371,503 வழக்­கு­கள் நாடு முழு­வ­தும் பதிவு செய்­யப்­பட்­டன.

இந்த எண்­ணிக்கை, முந்­தைய ஆண்டை (405,236) விட குறைவு ஆகும். கடந்த ஆண்­டில் பதி­யப்­பட்ட இத்தகைய மொத்த வழக்கு­களில் பாலி­யல் வன்­கொ­டு­மைச் சம்­ப­வங்­கள் மட்டுமே 27,046 ஆகும்.

நாளொன்­றுக்கு சரா­ச­ரி­யாக 77 பாலி­யல் வழக்­கு­கள் கடந்த ஆண்டு பதி­வாகி இருக்­கின்­றன.

மாநி­லங்­க­ளைப் பொறுத்­த­வரை ராஜஸ்­தா­னில் அதி­க­பட்­ச­மாக 5,310 பாலி­யல் வன்கொடுமை வழக்­கு­கள் கடந்த ஆண்டு பதி­வாகி உள்ளன.

அடுத்­த­தாக உத்­த­ர­ப் பி­ர­தே­சம் (2,769), மத்­தியப் பிர­தே­சம் (2,339), மராட்­டி­யம் (2,061), அசாம் (1,657) ஆகிய மாநி­லங்­கள் உள்­ளன.

பாலி­யல் வன்­கொ­டுமைச் சம்­ப­வங்­களைத் தவிர கண­வர் மற்­றும் உற­வி­னர்­களால் பெண்­கள் கொடு­மைப்­ப­டுத்­தப்­பட்ட 111,549 சம்­ப­வங்­கள் பற்றி புகார் தெரி­விக்­கப்­பட்டு வழக்கு­கள் பதி­வாகி இருப்­ப­தா­க­ குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ள­த­தா­க­ சமூக அளவில் கவலை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.