செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
50ec9508-257b-4966-b683-a81c7c2d0ad3
-

பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி: நிதி அமைச்சரின் கூட்டத்தில் எதிர்ப்பு

புது­டெல்லி: பெட்­ரோ­லி­யப் பொருள்­கள் ஜிஎஸ்டி வரம்­புக்­குள் கொண்­டு­வ­ரப்­பட மாட்­டாது என மத்­திய நிதி­ய­மைச்­சர் நிர்மலா சீதா­ரா­மன் தெரி­வித்­துள்­ளார். 45வது ஜிஎஸ்டி மன்­றக் கூட்­டம் லக்னோ நக­ரில் நிர்­மலா சீதா­ரா­மன் தலை­மை­யில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது. கூட்­டத்­துக்­குப் பின் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய நிர்­மலா, "கொரோனா சிகிச்­சைக்­கான மருந்­து­க­ளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு டிசம்­பர் 31 வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. பெட்­ரோல், டீசலை ஜிஎஸ்­டிக்­குள் கொண்டுவர ஜிஎஸ்டி மன்ற உறுப்­பி­னர்­கள் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ள­னர். பெட்­ரோ­லிய பொருள்­கள் ஜிஎஸ்டி வரம்­புக்­குள் கொண்­டு­வ­ரப்­பட மாட்­டாது. பயோ டீச­லுக்­கான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 5% ஆக குறைக்­கப்­பட்­டுள்­ளது. ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள் மேற்­கொள்­ளும் உணவு விநி­யோ­கத்­திற்கு ஜிஎஸ்டி வரி வசூ­லிக்­கப்­படும்," என்று அவர் கூறினார்.

13 நாளாக விலை ஏறவில்லை

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலைகள் ஒவ்வொரு நாளும் கூடி, குறைந்து வந்த நிலையில் நேற்று 13 வது நாளாக பெருநகரங்களான (மெட்ரோ) டெல்லி, மும்பை, சென்னை, கோல்கத்தா ஆகியவற்றில் விலை மாற்றமின்றி தொடர்ந்தது.

சேலையில் முதல்வர் படம்

புது­டெல்லி: ஆந்­திர முத­ல்வர் ஜெகன் மோகன் ரெட்­டி­யின் உரு­வத்தை விசைத்­தறி இயந்­தி­ரம் மூலம் நடிகையும் எம்எல்ஏ வுமான ரோஜா சேலை­யில் நெய்­தார். நகரி நக­ராட்சி சார்­பில் விசைத்­தறி இயந்­திரம் மூலம் வேலை இல்­லாத இளை­யருக்கு பயிற்சி வழங்கி விசைத்­தறி தொழில் திட்­டத்தை தொடங்கி வைத்­தபோது நெசவு நெய்யும் ரோஜாவின் ஆசை நிறைவேறியது.