4 நாளுக்குப் பின் அதிக தொற்று

4 நாளுக்குப் பின் அதிக தொற்று

1 mins read
a7e2150d-b548-4238-87f8-bd6fdb12ddf7
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் கொரோனா பாதிப்பு நான்கு நாள்­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் அதி­

க­ரித்­துள்­ளது. மத்­திய சுகா­தார அமைச்சு நேற்­றுக் காலை வெளி­யிட்ட 24 மணி நேர நில­வ­ரப்­படி நாடு முழு­வ­தும் 35,662 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

இத­னால் மொத்த பாதிப்பு எண்­ணிக்கை 3 கோடியே 34 லட்­சத்து 17 ஆயி­ரத்து 390 ஆக உயர்ந்­துள்­ளது. தொற்று கார­ண­மாக 281 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். இவர்­

க­ளை­யும் சேர்த்து மரண எண்­ணிக்கை 4 லட்­சத்து 44 ஆயி­ரத்து 529 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

புதி­தாக தொற்று உறுதி செய்­யப்­பட்­டோ­ரின் எண்­ணிக்­கை­யைப் பொறுத்த மட்­டில் நான்கு நாள்­

க­ளுக்­குப் பிறகு நேற்று மீண்­டும் அதி­க­ரித்­தது. செவ்­வாய் (25,404), புதன் (27,176), வியா­ழன் (30,570), (வெள்ளி 34,430) என சிறிய அள­வி­லான ஏற்ற, இறக்­கம் இருந்து வந்த நிலை­யில் நேற்று 35,662 என கூடி­விட்­டது. இதில் கேரள தொற்று மட்­டும் 65.22 விழுக்­காடு. அங்கு 24 மணி நேரத்­தில் 23,260 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இதற்கடுத்து மகா­ராஷ்­டிரா (3,586), தமிழ்­நாடு (1,669), மிசோ­ரம் (1,476), ஆந்­திரா (1,393) என தொற்று எண்­ணிக்கை பதி­வா­னது. 24 மணி நேர மரண எண்­ணிக்­கை­யி­லும் கேர­ளாவே உச்­சத்­தில் உள்­ளது. அங்கு 131 மர­ணங்­களும் அதற்கு அடுத்து மகா­ராஷ்­டி­ரா­வில் 67 மர­ணங்­களும் பதி­வா­யின.