புதுடெல்லி: கொவிட்-19 பொதுமுடக்கத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்து பெரும் பாராட்டுக்களைப் பெற்றவர் சோனு சூட்.
பாலிவுட் நடிகரான இவரது மும்பை இல்லத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இது தொடர்பாக அந்தத் துறை அதிகாரிகள் கூறுகையில், "நடிகர் மற்றும் அவரது கூட்டாளி
களின் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச் சான்றுகள் கிடைத்தன. அவரது கணக்கில் வராத வருமானத்தை கடன்களாக பலரிடமிருந்து பெற்றதுபோல போலியாகக் காட்டியுள்ளார்.
"மேலும் போலி நிறுவனங்
களிடம் இருந்து கடன் பெற்றுள்ளார். வரிஏய்ப்பு நோக்கத்திற்காக அவரது வருமானம் கணக்குப் புத்தகங்களில் கடன்களாக மறைக்கப்பட்டுள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த வரி ஏய்ப்பு ரூ.20 கோடிக்கும் மேல்," என வருமான வரித்துறை கூறியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அரசுடன் இணைந்து பணியாற்றுவதாகக் கூறிய பின்னர் சோனு சூட்டின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதாக சிவசேனா கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் குறைகூறியுள்ளன.