மத்தியப் பிரதேச பாஜக வேட்பாளர் எல்.முருகன்

2 mins read
d01a2c2a-a5d0-4d14-81e9-f96854f7b8b3
பிரதமர் மோடியிடம் ஆசி பெறும் எல்.முருகன். படம்: ஊடகம் -

கடவுளின் மறுஅவதாரம் மோடி: அமைச்சர்

புது­டெல்லி: கட­வு­ளின் மறு­அ­வ­தா­ர­மாக பிர­தமா் மோடி திகழ்­கிறாா் என மத்­திய உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை அமைச்­ச­ரும் லோக் ஜன­சக்தி கட்­சித் தலை­வ­ரு­மான பஷு­பாட்டி குமாா் பாரஸ், 68, கூறி­யுள்ளாா். மோடி­யின் 71வது பிறந்த நாளையொட்டி வெள்­ளிக்­கி­ழமை லோக் ஜன­சக்தி சாா்பில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் செய்­தி­யா­ளா்­

க­ளி­டம் அவா் இவ்­வாறு கூறி­னார்.

"யாரும் கட­வு­ளைப் பாா்க்க முடி­யாது. ஆனால், பிர­த­ம­ரைப் பாா்க்க முடி­கிறது. நாட்­டின் எதிா்கா­லத்­தைத் தீா்மானிக்­கும் அவா், எனது பாா்வையில் கட­வு­ளா­கத் தோன்­று­கி­றார்," என்­றார் பஷு­பாட்டி.

புது­டெல்லி: 2020 மார்ச் முதல் சுமார் ஒன்­றரை ஆண்டு காலம் தமி­ழக பாஜக தலை­வ­ராக பதவி வகித்த எல். முரு­கன், 44, கடந்த ஜூலை மாதம் மத்­திய இணை அமைச்­ச­ராக அறி­விக்­கப்­பட்­டார்.

முன்­ன­தாக, ஏப்­ரல் மாதம் நடை­பெற்ற தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்­தி­ருந்­தார்.

அதன் பின்­னர் மத்­திய அமைச்­ச­ராக அறி­விக்­கப்­பட்­ட­தால் ஆறு மாதங்­க­ளுக்­குள் அவர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட வேண்­டும் என்­பது விதி.

இந்­நி­லை­யில், பல மாநிலங்களில் காலி­யாக உள்ள நாடா­ளு­மன்ற மேலவை (மாநி­லங்­க­ளவை) உறுப்­பி­னர் இடங்

­க­ளுக்­கான வேட்­பா­ளர்­களை பாஜக தலைமை நேற்று அறி­வித்­தது. மத்­திய பிர­தே­சம் மாநி­லம் சார்­பாக போட்­டி­யிட எல். முரு­கன் பெயர் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு அவர் எளி­தில் வெற்­றி­பெ­றும் நிலை உள்­ளது.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த முன்­னாள் பாஜக தலை­வர் இல.கணே­சன் மத்­திய பிர­தே­சத்­தி­லி­ருந்து மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரா­கத் தேர்ந்து எடுக்­கப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.