அமைச்சர்: புதிய விரைவுச்சாலைகள் தங்கச் சுரங்கம்போல் வருவாயை அள்ளித் தரும்

அமைச்சர்: புதிய விரைவுச்சாலைகள் தங்கச் சுரங்கம்போல் வருவாயை அள்ளித் தரும்

2 mins read
50fe4044-d940-4e8e-b3bc-7dbba744eefd
அமைச்சர் கட்கரி, குஜராத்தில் பாரக் என்ற நகருக்கு அருகே நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் நெடுஞ் சாலைப் பகுதியைப் பார்வை யிட்டார். படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: இந்­திய அர­சாங்­கம் சாலை அடிப்­படை கட்­ட­மைப்பு வசதி­க­ளைக் கடந்த ஏழு ஆண்­டு ­கா­ல­மாக பெரிய அள­வில் விரி­வு­படுத்தி வரு­கிறது.

இதன் ஒரு பகு­தி­யாக டெல்லிக்­கும் மும்­பைக்­கும் இடை­யில் ஏறத்­தாழ 1,320 கி.மீ. தொலை­வில் அமைக்­கப்­பட்­டு­வ­ரும் தேசிய நெடுஞ்­சாலை உல­கின் ஆகப் பெரிய விரை­வுச் சாலை­யா­கத் திகழுமென தெரி­வி­க்கப்­படுகிறது.

இந்­தி­யா­வின் மத்­திய சாலைப் போக்குவரத்து மற்­றும் நெடுஞ்­சாலைத் துறை அமைச்­சர் நிதின் கட்­கரி, அந்­தச் சாலை கட்­டு­மானத்தைக் கடந்த சில நாட்­க­ளாக பார்­வை­யிட்டு வரு­கி­றார்.

மும்பை-டெல்லி விரை­வுப்­பாதை பற்றி நேற்று அவர் பிடிஐ செய்தி நிறு­வ­னத்­திற்கு அளித்த பேட்­டி­யில் பல விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

"மும்பை-டெல்லி சாலை 2023ல் அமைத்து முடிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அது பொது மக்­க­ளுக்­குத் திறந்­து­வி­டப்­பட்ட பிறகு சாலைக் கட்­டண வசூ­லாக மாதம் ரூ.1,000 கோடி முதல் ரூ.1,500 கோடி வரை அர­சுக்­குப் பணம் கிடைக்­கும்.

"ஏழு சாலைத் திட்­டங்­கள் பிரம்­­மாண்ட அள­வில் இடம்­பெற்று­ வரு­கின்­றன. அவற்­றின் மூலம் ஆண்டுதோறும் அர­சுக்கு 1.40 லட்­சம் கோடி ரூபாய் வரு­வாய் கிடைக்­கும் என்று கணிக்­கப்­ப­டு­கிறது. இப்­போது இந்த வரு­வாய் ரூ. 40,000 கோடி­யாக இருக்­கிறது.

"அர­சாங்­கத்­திற்­குச் சொந்­த­மான இந்­திய தேசிய நெடுஞ்­சாலை ஆணை­யம், தங்­கச் சுரங்­கம் போல் அர­சுக்­குப் பணத்தை அள்­ளித் தரும்," என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

மும்பை-டெல்லி எட்டு வழித்­தட பாதை டெல்லி, ஹரி­யானா, ராஜஸ்­தான், மத்­தி­யப் பிர­தே­சம், குஜ­ராத் ஆகிய மாநி­லங்­களை உள்­ள­டக்கி அமைக்­கப்­ப­டு­கிறது.

பயண நேரம் பாதி­யாக- 12 மணி நேர­மா­கக் குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சாலை விரி­வாக்­கத் திட்­டத்­தின்­படி நாள்­தோ­றும் 30 கி.மீ. தொலை­வுக்கு சாலை­கள் அமைக்­கப்­பட்­டு­ வ­ருவ­தாக அமைச்சர் அண்­மை­யில் ஒரு பேட்­டி­யில் தெரி­வித்து இருந்­தார். டெல்லி-மும்பை விரை­வுச்­சாலைத் திட்­டத்­திற்கு 2019ஆம் ஆண்டு அடிக்­கல் நாட்­டப்­பட்­டது.

அந்­தச் சாலை சுமார் 90,000 கோடி ரூபாய் செல­வில் அமைகிறது.

50 கிலோமீட்டர் இடைவெளியில் 73 இடங்களில் பயணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய வசதி கள் அமைக்கப்படுகின்றன.