ஏழை மாணவிகளுக்கு இலவச வீடுகள்: இரு ஆசிரியைகளின் தொண்டுக்குப் பெரும் பாராட்டு

ஏழை மாணவிகளுக்கு இலவச வீடுகள்: இரு ஆசிரியைகளின் தொண்டுக்குப் பெரும் பாராட்டு

1 mins read
1490b495-e0f9-478a-abd0-c12e34bb7e44
கேரளாவின் கொச்சி மாவட்டத்தில் செயல்படும் ஒரு பெண்கள் பள்ளியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகள் வீடு இல்லாத மாணவிகளுக்காக இத்தகைய வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறார் கள். படங்கள்: இந்திய ஊடகம் -
multi-img1 of 2

கொச்சி: கேரள மாநி­லம் கொச்சி மாவட்­டம், தோப்­பும்­பா­டி­யில் உள்ள பெண்­கள் பள்­ளி­யில் பணி­யாற்றும் இரண்டு ஆசி­ரி­யை­கள் அந்த மாநி­லத்­தில் வீடு இல்­லாத ஏழை மாண­வி­க­ளுக்­காக இல­வ­ச­மாக வீடு கட்டிக் கொடுக்­கும் திட்டத்தை நடத்தி வரு­கி­றார்­கள்.

அவர்­களின் இந்­தச் சமூ­கப் பணிக்­குப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் பெரும் பாராட்டு தெரி­வித்து வரு­கிறார்கள்.

தந்­தையை இழந்த ஒரு மாண­விக்­காக 2014ஆம் ஆண்டு வீடு கட்­டி­ய­தில் தொடங்­கிய இந்தப் பணி, தொடர்ந்து இடம்பெற்று வரு­வ­தா­க­வும் மாணவி­க­ளுக்­காக இது­வரை 150 வீடு­கள் கட்டிக் கொடுத்­தி­ருப்­ப­தா­க­வும் அவர்­கள் தெரிவித்­த­னர்.

தேவை­யான நிதியை நன்­கொடை மூலம் ஆசி­ரி­யை­கள் சேக­ரிக்­கின்­ற­னர்.

ஆசி­ரி­யை­க­ளில் ஒரு­வரான திருவாட்டி லிஸ்சி என்­ப­வர், சொந்த நிலம் இருந்­தும் சரி­யான வீடு இல்­லாத தங்­கள் மாண­வி­களுக்கு நிரந்­தர வீடு கட்­டு­வ­தற்­காக 'ஹவுஸ் சேலஞ்ச்' என்ற திட்டத்­தைத் தாங்­கள் தொடங்­கி­ய­தாகக் குறிப்­பிட்­டார்.

"அந்தத் திட்­டத்தை தொடங்கிய பிறகு பல குடும்­பங்­க­ளுக்கு நிலம் இல்லை என்­பதை அறிந்­தோம்.

"எனவே அவர்­க­ளுக்­காக நிலத்தை­யும் இல­வச­மா­கக் கொடுக்­கும்­படி கேட்டு மக்­களை அணு­கி­னோம். ஒத்துழைப்பு மற்றும் பகிர்ந்தளிக்கும் கலாசாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வீடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் கனவு," என்று ஆசிரியை திருவாட்டி லிஸ்சி தெரிவித்தார்.