இந்தியா-பிரான்ஸ் இணக்கம்

புது­டெல்லி: பிரான்­சும் இந்­தி­யா­வும் சேர்ந்து 'உண்­மை­யான பல­த­ரப்பு உலக வர்த்­தக ஏற்­பாட்டை' மேம்­படுத்­தும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இதன் தொடர்­பில் பிரான்­சின் வெளி­யு­றவு அமைச்­ச­ருக்­கும் இந்­திய வெளி­யு­றவு அமைச்­ச­ருக்­கும் இடை­யில் இணக்­கம் ஏற்­பட்டு இருப்­ப­தாக பிரான்ஸ் வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இரு நாடு­க­ளின் அமைச்­சர்­கள் தங்­கள் நாடு­க­ளுக்கு இடை­யி­லான உத்­தி­பூர்வ பங்­கா­ளித்­துவ உறவை பலப்­ப­டுத்­திக்­கொள்­ளும் வகை­யில் அண்­மை­யில் தொலை­பேசி மூலம் பேசி­னர்.

பிரான்ஸ் வெளி­யு­றவு அமைச்­சர் ஜீன்-யேவ்ஸ் லி டிரை­னும் இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­க­ரும் பேசி­னர். இந்தோ-பசி­பிக் பகு­தி­யில் இந்த இரண்டு மாபெ­ரும் இறை­யாண்மை நாடு­க­ளுக்கு இடை­யில் நில­வும் அர­சி­யல் நம்­பிக்­கை­மிக்க நல்­லு­ற­வின் அடிப்­ப­டை­யில் இவ்­விரு நாடு­களும் தங்­கள் உத்தி­பூர்வ உற­வு­களை மேலும் பலப்­படுத்­திக்கொள்­ளும் என்று அமைச்­சர்­கள் இணங்­கி­ய­தாக பிரான்ஸ் அமைச்சு குறிப்­பிட்­டது.

அடுத்த வாரம் நியூ­யார்க்­கில் சந்­திக்­க­வும் இரு அமைச்­சர்­களும் இணங்­கி­னர்.

அந்­தச் சந்­திப்­பின்­போது உண்மை­யான பல­த­ரப்பு அனைத்­து­லக வர்த்­தக ஏற்­பாடு ஒன்றை பலப்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் பொது­வான, உருப்­ப­டி­யான செயல்­திட்­டங்­க­ளின் பேரில் இரு தலை­வர்­களும் செயல்­பட இருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இந்தோ-பசி­பிக் பகு­தி­யி­லும் ஆப்­கா­னிஸ்­தா­னி­லும் நில­வும் அண்­மைய நில­வ­ரங்­கள் பற்­றி­யும் தாங்­கள் விவா­தித்­த­தாக அமைச்­சர் ஜெய்­சங்­கர் டுவிட்­ட­ரில் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!