எதிர்க்கட்சிகளின் 11 நாள் தொடர் போராட்டம் தொடங்கியது

எதிர்க்கட்சிகளின் 11 நாள் தொடர் போராட்டம் தொடங்கியது

1 mins read
59924ba1-5796-4c58-bd18-1a3aed29e305
பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரசார் பங்கேற்றனர். படம்: இபிஏ -

புதுடெல்லி: மத்திய அரசுக்கு எதிரான 11 நாள் தொடர் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நேற்று தொடங்கின.

காங்­கி­ரஸ் தலை­மை­யில் மொத்­தம் 19 எதிர்க்­கட்­சி­கள் இணைந்து நாடு தழு­விய அள­வில் போராட்­டங்­களை நடத்த உள்­ளன. செப்­டம்­பர் மாத இறுதி வரை இவை நீடிக்­கும் என அக்­கட்­சி­கள் அறி­வித்­தன.

அதன்­படி, பெங்­க­ளூ­ரில் மாநில காங்­கி­ரஸ் சார்­பில் பெட்­ரோல், டீசல், சமை­யல் எரி­வாயு விலை அதி­க­ரிப்­பைக் கண்­டித்து அக்­கட்­சி­யி­னர் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இதே போல், பல்­வேறு மாநி­லங்­க­ளி­லும் எதிர்க்­கட்­சி­கள் சார்­பில் போராட்­டங்­கள் நடை­பெற்­ற­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.