வெற்றிபெற மோடி அலை மட்டும் போதாது: எடியூரப்பா சர்ச்சைப் பேச்சு

வெற்றிபெற மோடி அலை மட்டும் போதாது: எடியூரப்பா சர்ச்சைப் பேச்சு

1 mins read
b038303c-3c90-4cc0-823f-5aa0126c4bd7
-

பெங்­க­ளூரு: கடந்த தேர்­த­லில் வெற்­றி­பெற மோடி அலை உத­விய போதி­லும், அடுத்து வரும் தேர்­த­லில் மோடி அலையை மட்­டுமே நம்­பி­யி­ருக்க முடி­யாது என கர்­நா­டக முன்­னாள் முதல்­வர் எடி­யூ­ரப்பா தெரி­வித்­துள்­ளார்.

அவ­ரது இந்­தப் பேச்சு பாஜக வட்­டா­ரங்­களில் முணு­மு­ணுப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

கூட்டு முயற்சி இருந்­தால் மட்­டுமே கர்­நா­ட­கா­வில் எதிர்­வ­ரும் 2023ஆம் ஆண்டு நடை­பெற உள்ள சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் பாஜ­க­வால் வெற்றி பெற்று மீண்­டும் ஆட்­சி­யைப் பிடிக்க முடி­யும் என அவர் கூறி­யுள்­ளார்.

"கடந்த கால தேர்­தல்­க­ளின்­போது பல மாநி­லங்­களில் பாஜக அதிக தொகு­தி­களைக் கைப்­பற்­ற­வும் ஆட்­சியைத் தக்க வைக்­க­வும் பிர­த­மர் மோடிக்கு ஆத­ர­வான அலை கைகொ­டுத்­தது. ஆனால் இம்­முறை அது மட்­டுமே போது­மா­ன­தல்ல.

"சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் உள்­ளூர் தலை­வர்­க­ளின் பங்­க­ளிப்பு அதி­கம் இருக்க வேண்­டும்," என அண்­மை­யில் பத­வி வில­கிய எடி­யூ­ரப்பா மேலும் தெரி­வித்­துள்­ளார்.