சாலை விபத்துகளில் 120,000 பேர் பலி

சாலை விபத்துகளில் 120,000 பேர் பலி

1 mins read
c156398e-d074-46fa-b8d5-eb797c335c48
-

புது­டெல்லி: கடந்த 2020ஆம் ஆண்டு நாடு முழு­வ­தும் சாலை விபத்­து­களில் சுமார் 120,000 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக தேசிய குற்ற ஆவண காப்­ப­கம் தெரி­வித்­துள்­ளது.

அன்­றாட இறப்பு எண்­ணிக்கை 328 ஆகும். கடந்த 2018, 2019, 2020 என மூன்று ஆண்­டு­களில் மட்­டும் மொத்­தம் 392,000 பேர் விபத்­து­களில் இறந்­து­விட்­ட­தாக குற்ற ஆவ­ணக் காப்­பக அறிக்கை கூறு­கிறது.

இதற்­கி­டையே மருத்­து­வத்­து­றை­யின் பொறுப்­பற்ற செயல்­பா­டு­க­ளால் 133 பேரும் உள்­ளாட்சி அமைப்­பு­களில் நிலவிய கவ­னக்­கு­றை­வால் 51 பேரும் பலி­யா­கி­விட்­ட­னர்.

இதே­போல் பொறுப்­பற்ற செயல்­பா­டு­கள் பிற துறை­க­ளி­லும் 6,367 பேரை காவு வாங்கி உள்­ள­தாக குற்ற ஆவ­ணக் காப்­ப­கத்­தின் அண்­மைய அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு, பெண்­கள், குழந்­தை­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் குறைந்­துள்­ள­தா­க­வும் ஊர­டங்கு விதி­மீ­றல் தொடர்­பாக அதிக வழக்­கு­கள் பதி­வா­ன­தா­க­வும் தேசிய குற்ற ஆவ­ணக் காப்­ப­கம் தெரி­வித்­துள்­ளது.