மும்பை: இந்திய மக்களுக்குத் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்வது எனும் கடப்பாட்டைக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது சேவை அமைப்பில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் ஏதேனும் ஒரு விலைமதிப்பில்லாத உயிரைக் காப்பாற்ற காத்திருப்பதாகக் கூறியுள்ளார் சோனு.
இவர் இருபது கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக வருமான வரித்துறை கூறியுள்ளது. இது குறித்து கடந்த சில தினங்களாக மௌனம் காத்து வந்த சோனு சூட், சில விருந்தினர்களைக் கவனிக்க வேண்டியிருந்ததால் தம்மால் விளக்கம் அளிக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
தாம் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றும் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் குடிமகன் என்றும் தெரிவித்துள்ள அவர், தமக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு இருமுறை தேடி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் கால்பதிக்க மனதளவில் தாம் இன்னும் தயாராகவில்லை என்றும் சோனு சூட் கூறியுள்ளார்.