இந்தியாவில் இருந்து வருபவர்களுக்குப் புதிய பயண விதிகள்: பிரிட்டன் அறிவிப்பால் சர்ச்சை

1 mins read
368e16dc-2a4b-4e05-b0f0-cc39576003c6
-

புது­டெல்லி: பிரிட்­ட­னுக்கு பய­ணம் மேற்­கொள்­ப­வர்­கள் பின்­பற்ற வேண்­டிய புதிய பயண விதி­மு­றை­களை அந்­நாடு வெளி­யிட்­டுள்­ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதன்­படி, இந்­தி­யா­வில் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­களும்கூட, தடுப்­பூசி போடா­த­வர்­க­ளின் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­ப­டு­வர் என்­றும் அவர்­கள் பத்து நாள்­கள் கட்­டாயத் தனி­மைப்­ப­டுத்­த­லில் இருக்க வேண்­டும் என்­றும் தெரிய வந்­துள்­ளது.

இது இந்­திய தரப்­புக்கு மனக்­குறையை ஏற்­ப­டுத்தி உள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. பிரிட்­டன், ஐரோப்பா, அமெ­ரிக்­கா­வில் தடுப்­பூசி திட்­டத்­தின்கீழ் குறிப்­பிட்ட சில தடுப்­பூ­சி­க­ளுக்கு அங்­கீ­கா­ரம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. அவற்றை போட்­டுக்­கொள்­ப­வர்­கள் மட்­டுமே தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் எனக் கரு­தப்­ப­டு­வார்­கள் என பிரிட்­டன் வெளி­யிட்ட புதிய பயண விதி­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அஸ்ட்ராஸெனக்கா, ஃபைசர், மொடர்னா உள்­ளிட்ட தடுப்­பூ­சி­களை பிரிட்­டன் அங்­கீ­க­ரித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் போடப்­படும் தடுப்­பூசி­கள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பட்­டி­ய­லில் இல்­லா­த­தால் சிக்­கல் எழுந்­துள்­ளது. இத­னால் பிரிட்­ட­னுக்குப் பய­ணம் மேற்­கொள்­ளும் இந்­தி­யர்­கள் பய­ணத்­துக்கு முன்பு, பிரிட்­டன் சென்ற பிறகு கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும். இதற்­கான விதி­மு­றை­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. தொற்று பாதிப்பு அதி­கம் உள்ள நாடு­க­ளை­யும் தடுப்­பூசி வகை­களை­யும் கொண்டு பிரிட்­ட­னுக்­குள் அனு­ம­திக்­கப்­படும் பய­ணி­க­ளுக்­கான பல்­வேறு பயண விதி­களை அந்­நாடு அறி­வித்­துள்­ளது.

இது குறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறும் அவர் வலியுறுத்தி உள்ளார்.