மத்திய அரசு திட்டம்: விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை

மத்திய அரசு திட்டம்: விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை

1 mins read
8cc1da62-9d40-49cf-9182-5bd8a88c1b40
-

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் உள்ள அனைத்து விவ­சா­யி­க­ளுக்­கும் மிக விரை­வில் புதிய அடை­யாள அட்டை வழங்­கப்­படும் என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

இதன் மூலம் மத்­திய அர­சின் திட்­டங்­களில் விவ­சா­யி­கள் எளி­தில் இணைய முடி­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய அட்­டை­கள் மொத்­தம் 12 இலக்க எண்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் என்­றும் இதன் மூலம் புதிய திட்­டங்­க­ளால் விளை­யும் நன்­மை­களை விவ­சா­யி­கள் முழுமை­யா­கப் பெற முடி­யும் என்­றும் மத்­திய விவ­சாய நலத்­து­றை­யின் கூடு­தல் செய­லா­ளர் விவேக் அகர்­வால் கூறி­யுள்­ளார்.

புதிய அட்­டை­கள் தயா­ரிப்­ப­தற்­கான பணி­கள் நடை­பெற்று வருவதா­கக் குறிப்­பிட்ட அவர், இந்த ஏற்­பாட்­டின் மூலம் விவ­சா­யி­க­ளி­டம் இருந்து விளைபொருள்­க­ளைக் கொள்­மு­தல் செய்­வது எளி­தா­கும் என்­றார்.

"கொள்­மு­தல் தொடர்­பாக மத்­திய, மாநில அர­சு­கள் இனி சிறப்­பா­கத் திட்­ட­மிட முடி­யும். மேலும், எட்டுக் கோடி விவ­சா­யி­கள் இத்­திட்­டத்­தின்கீழ் சேர்க்­கப்­ப­டு­வார்­கள்," என்று விவேக் அகர்­வால் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

புதிய வேளாண் சட்­டங்­களை மத்­திய அரசு திரும்­பப் பெற வலி­யு­றுத்தி கடந்த பல மாதங்­க­ளாக டெல்­லி­யின் புற­ந­கர்ப் பகு­தி­களில் கூடா­ரங்­கள் அமைத்து தங்கி, ஏராளமான விவ­சா­யி­கள் தொடர் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.