நாச வேலைக்குச் சதி: உளவாளி அதிரடிக் கைது

நாச வேலைக்குச் சதி: உளவாளி அதிரடிக் கைது

1 mins read
3b60f596-a47a-4a6d-87f5-1235835f2d95
-

பெங்­களூரு: தொடர் குண்டு­ வெ­டிப்­புச் சம்­ப­வங்­கள் மூலம் பெங்­க­ளூரு நகரை நிலை­குலைய வைக்­கும் திட்­டத்­துடன் ஊடு­ரு­விய உள­வாளியைக் காவல்­துறை கைது செய்­தது.

ராஜஸ்­தா­னைச் சேர்ந்த ஜிதேந்­தர் சிங் என்ற அந்த ஆட­வர், பாகிஸ்­தான் ஆத­ரவைப் பெற்ற ஐஎஸ் பிரி­வின் ஆத­ர­வா­ளர் என்­றும் தெரிய வந்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் பெங்­க­ளூ­ரில் சந்­தே­கத்­துக்கு இட­மளிக்­கும் வகை­யில் சுற்­றித்­தி­ரிந்த ஜிதேந்­தர் சிங்கை போலி­சார் கைது செய்­த­னர்.

அவர் வீட்­டைச் சோத­னை­யிட்­ட­போது ராணுவ மையத்­தின் முக்­கிய வரை­ப­டங்­கள், பள்ளி­கள், முக்­கியக் கட்­ட­டங்­கள், ரயில், பேருந்து நிலைய வரை­படங்­கள் இருப்­பது தெரி­ய­வந்­தது. பாகிஸ்­தான் உளவாளி போல் செயல்­பட்டு தாம் அனுப்­பும் தக­வல்­க­ளுக்­குப் பணம் பெற்று வந்­துள்­ளார் ஜிதேந்­தர்.