சிறார் கொரோனா தடுப்பு சொட்டு மருந்து விரைவில் அறிமுகம்்

சிறார் கொரோனா தடுப்பு சொட்டு மருந்து விரைவில் அறிமுகம்்

2 mins read
03833444-80a8-46c4-98d8-80ddd6f715dd
-

18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிந்தது

புது­டெல்லி: சிறார்­க­ளுக்­கான தடுப்­பூசி மிக விரை­வில் அறி­மு­க­மா­கும் என பாரத் பயோ­டெக் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இ்த்த­டுப்­பூ­சி­யின் இறு­திக்­கட்ட சோதனை வெற்­றி­க­ர­மாக முடி­வ­டைந்­துள்­ளது என்­றும் இது தொடர்­பான விரி­வான அறிக்கை மத்­திய அர­சி­டம் அடுத்த வாரம் தாக்­கல் செய்­யப்­படும் என்­றும் அந்­நி­று­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் கிருஷ்ணா எல்லா கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, சிறார்­க­ளுக்­கான புதிய கொரோனா தொற்­றுத்­தடுப்பு மருந்­தா­னது திரவ வடி­வில் இருக்­கும் என்­றும் 18 வய­துக்­கு உட்­பட்­ட­வர்­க­ளுக்கு இது மூக்கு வழி செலுத்­தப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

''சிறார்­க­ளுக்­கான தடுப்­பூசி ஆயி­ரம் குழந்­தை­கள், பதின்ம வய­தி­ன­ருக்குச் செலுத்­தப்­பட்டு பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­போல் மூக்கு வழி செலுத்­தப்­படும் சொட்டு மருந்­தின் இரண்­டாம் கட்­டப் பரி­சோ­தனை தொடங்க உள்­ளது. இது மூன்று பிரி­வு­க­ளாக நடத்­தப்­படும்.

"முத­லில் கோவேக்­சின் தடுப்­பூசி போடப்­பட்டு பிறகு மூக்கு வழி சொட்டு மருந்து தரப்­படும். இல்­லை­யெ­னில் இரண்டு முறை சொட்டு மருந்து மூக்­கின் வழி செலுத்­தப்­படும். மூன்­றா­வ­தாக முத­லில் சொட்டு மருந்து அளித்த 28 நாள்­க­ளுக்­குப் பிறகு கோவேக்­சின் தடுப்­பூசி போடப்­படும்," என்­றார் கிருஷ்ணா எல்லா.

இந்­தி­யா­வில் தற்­போது 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு மட்­டுமே கொரோனா தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது. இது­வரை 820 மில்­லி­யன் பேருக்கு ஒரு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து 18 வய­துக்­குட்­பட்­ட­வர்­கள் மீது மத்­திய அர­சின் கவ­னம் திரும்பியுள்­ளது. சிறார்­களுக்குத் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கோவேக்­சின் தடுப்­பூ­சியைத் தயா­ரித்த ஹைதரா­பாத்­தில் இயங்­கும் பாரத் பயோ­டெக் நிறு­வ­னம்­தான் சிறா­ர்க்­கும் பதின்ம வய­தி­ன­ருக்­கு­மான தடுப்­பூ­சி­யை­யும் தயா­ரிக்­கும் பணியி­லும் ஈடு­பட்­டுள்­ளது.