புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் எதிர்வரும் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 31ஆம் தேதி இந்த ஆணையத்தின் பதிமூன்றாவது கூட்டம் நடைபெற்றது.
அப்போது விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்துதான் எதிர்வரும் கூட்டத்திலும் விவாதிக்கப்பட இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தக் கூட்டம் காணொளி வழி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
அணை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அண்மையில் பிறப்பித்த ஓர் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தை அணுகியது.