ஏழு மாநில தேர்தல்: களையெடுக்கும் பாஜக

ஏழு மாநில தேர்தல்: களையெடுக்கும் பாஜக

2 mins read
afeefff8-8a0d-4ec1-b6b0-6578e6def736
-

புது­டெல்லி: அடுத்த ஆண்டு நடை­பெற உள்ள ஐந்து மாநி­லங்­க­ளுக்­கான சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லின்­போது நடப்பு எம்­எல்­ஏக்­களில் சுமார் 50 விழுக்­காட்­டி­ன­ருக்கு பாஜக தலைமை மீண்­டும் வாய்ப்பு தராது என தக­வல் வெளி­யாகி உள்­ளது.

பாஜக தலைமை இது­கு­றித்து கட்­சி­யின் மூத்த தலை­வர்­க­ளு­டன் ஆலோ­சித்த பிறகு இம்­மு­டிவை எடுத்­தி­ருப்­ப­தாக ஹிந்­துஸ்­தான் டைம்ஸ் ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

உத்­த­ரப் பிர­தே­சம், குஜ­ராத், கோவா, பஞ்­சாப், மணிப்­பூர், ஹிமாச்­ச­லப் பிர­தே­சம், குஜ­ராத், உத்­த­ர­காண்ட் ஆகிய ஏழு மாநிலங்­களில் அடுத்த ஆண்டு சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல்­கள் நடை­பெற உள்­ளன. பாஜக, காங்­கி­ரஸ், ஆம் ஆத்மி என அனைத்து அர­சி­யல் கட்­சி­களும் இதற்­கான வியூ­கங்­களை அமைத்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், தேர்­தல் நடை­பெற உள்ள, பாஜக ஆளும் குஜ­ராத், உத்­த­ர­காண்ட் மாநி­லங்­க­ளின் முதல்­வர்­கள் மாற்­றப்­பட்­டுள்­ள­னர்.

பாஜ­க­வைப் பொறுத்­த­வரை மாநில அள­வி­லான பிரச்­சி­னை­களு­டன், மத்­தி­யில் ஆட்­சி­யில் இருப்­ப­தால் இயல்­பாக எழக்­கூடிய அதி­ருப்­தி­யை­யும் சமாளிக்க வேண்டி­யுள்­ளது.

இதை மன­திற்­கொண்டே இந்­தாண்டு நடை­பெற்ற ஐந்து மாநிலங்­க­ளுக்­கான சட்­டப்­பே­ரவைத் தேர்­த­லின்­போது பத­வி­யில் இருந்த எம்­எல்­ஏக்­களில் சுமார் 15 முதல் 20 விழுக்­காட்­டி­ன­ருக்கு தேர்­தலில் மீண்­டும் போட்­டி­யிட பாஜக தலைமை வாய்ப்பு அளிக்­க­வில்லை.

அதற்கு ஓர­ளவு பலன் கிடைத்­துள்­ளதை அடுத்து, ஏழு மாநிலங்­களுக்­கான இடைத்­தேர்­த­லி­லும் இதே நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள இருக்­கிறது. அதன்­படி இம்­முறை சுமார் 50 விழுக்­காடு எம்­எல்­ஏக்­கள் வாய்ப்பு கிடைக்­கா­மல் ஏமாற்­ற­மடை­யக்கூடும் என்­கின்­றன பாஜக வட்­டா­ரங்­கள்.

தேர்­தல் நடக்­கும் ஏழு மாநி­லங்­க­ளி­லும் கள நில­வ­ரங்­கள் குறித்து பாஜக தலைமை சத்­த­மின்றி ஆய்வு நடத்தி உள்­ளது.

கடந்த ஐந்து ஆண்­டு­களில் கட்சி எம்­எல்­ஏக்­கள் தங்­கள் தொகுதி­யில் மேற்­கொண்ட வளர்ச்சிப் பணி­கள் குறித்து தனிப்­பட்ட அறிக்கை தர வேண்­டும் என உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

"அந்த அறிக்கை கட்­சித் தலைமை நடத்­திய ஆய்­வின்­போது திரட்­டப்­பட்ட தக­வல்­க­ளு­டன் ஒத்துப்­போ­னால் மட்­டுமே மீண்­டும் வாய்ப்பு அளிக்­கப்­படும். பாஜ­க­வில் நடப்பு எம்­எல்­ஏக்­க­ளுக்கு மீண்­டும் வாய்ப்பு கிடைக்­கா­மல் போவது புதி­தல்ல.

"கடந்த 2018ஆம் ஆண்டு ராஜஸ்­தான் தேர்­த­லின்­போது பத­வி­யில் இருந்த 43 எம்­எல்­ஏக்­க­ளுக்கு வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வில்லை. இதே­போல் ஜார்க்­கண்ட் தேர்­த­லி­லும் 12 எம்­எல்­ஏக்­கள் வாய்ப்பு இழந்­த­னர்," என்று பாஜக நிர்­வா­கி­கள் சிலர் தெரி­வித்­த­தாக ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"இது­போன்ற நட­வ­டிக்­கை­களின் மூலம் மக்­கள் மன­தில் உள்ள மனக்­கு­றை­யின் தாக்­கத்தையும் கோபத்தையும் குறைக்க இய­லும் என்று பாஜக தலைமை நம்­பு­வ­தாகத் தெரி­கிறது," என்­கி­றார்­கள் அர­சி­யல் ஆய்­வா­ளர்­கள்.