காவல்துறை: போதைப்பொருள் வழக்கில் தெலுங்கு திரையுலகத்தினர் விடுவிப்பு

ஹைத­ராபாத்: தெலுங்கு திரை­யு­லகைச் சேர்ந்த பல­ருக்­குப் போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­தும் பழக்­கம் உள்­ள­தாக எழுந்த குற்­றச்­சாட்டு உண்­மை­யல்ல என தெலுங்­கானா காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

இவ்­வி­வ­கா­ரம் தொடர்­பாக குற்­றம் சாட்­டப்­பட்ட 13 பேரி­டம் தீவிர விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தா­க­வும் அவர்­க­ளுக்கு எதி­ராக எந்­த­வொரு ஆதா­ர­மும் கிடைக்­க­வில்லை என்றும் போலி­சார் கூறி­யுள்­ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஹைத­ரா­பாத்­தில் உள்ள தனி­யார் தங்­கு விடு­தி­யில் நடை­பெற்ற கேளிக்கை விருந்து நிகழ்­வில், போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­தப்­படு­வ­தாக போலி­சா­ருக்கு ரக­சி­யத் தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து போலி­சார் அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர். அப்­போது கெல்­வின் என்­ப­வர் கைதா­னார். அவ­ரி­டம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யின்­போது தெலுங்கு திரை­யு­லத்­தி­ன­ருக்கு தாம் போதைப்­பொ­ருள் விநி­யோகித்து வரு­வ­தா­கக் கூறி­னார். இது அச்­ச­ம­யம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

அவர் அளித்த தக­வ­லின் பேரில் முன்­னணி நடி­கை­க­ளான ரகுல் பிரீத் சிங், சார்மி, நடி­கர்­கள் ரவி­தேஜா தருண், நவ்­தீப் உட்­பட 13 பேரி­டம் காவல்­துறை தீவிர விசா­ரணை நடத்­தி­யது. அதில் அவர்­களுக்­கும் கெல்­வி­னுக்­கும் எந்­த­விதத் தொடர்­பும் இல்லை என்­பது தெரிய வந்­துள்­ளது.

"சில­ரது மாதி­ரி­கள் பரி­சோ­த­னைக்கு உட்படுத்­தப்பட்­டதில் அவர்­களிடம் போதைப்­பொரு­ளைப் பயன்­ப­டுத்­தும் பழக்­கம் இல்லை என்­ப­தும் உறு­தி­யா­னது. வழக்கை திசை­தி­ருப்ப கெல்­வின் பொய்­யான தக­வல்­களை அளித்­துள்­ளார்," என்று காவல்துறை தாக்­கல் செய்­துள்ள குற்­றப்பத்­திரிக்­கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!