கொரோனா சான்றிதழ் அங்கீகாரம்: இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்

அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்: உலக நாடுகளுடன் இந்தியா ஆலோசனை

புது­டெல்லி: கொரோனா சான்­றி­தழை அங்­கீ­க­ரிப்­பது தொடர்­பாக உலக நாடு­க­ளு­டன் இந்­தியா ஆலோ­சித்து வரு­வ­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் உற்­பத்தி செய்­யப்­படும் கோவி­ஷீல்ட் தடுப்­பூ­சியை பிரிட்­டன் அரசு தனது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தடுப்­பூ­சி­கள் பட்­டி­ய­லில் இணைத்­துக்­கொண்­ட­தாக அறி­வித்­துள்ள நிலை­யில், மத்­திய அரசு இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளது.

எதிர்­கா­லத்­தில் கொரோனா சான்­றி­தழ் தொடர்­பில் விதி­மு­றை­க­ளின் அடிப்­ப­டை­யில் வெளிப்­ப­டை­யான செயல்­பாட்டை இந்த உல­கம் எதிர்­பார்க்­கும் என்று மத்­திய அமைச்­சர் ராஜீவ் சந்­தி­ர­சே­கர் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக பிர­த­மர் மோடி தலை­மை­யில் இந்­தியா குறிப்­பி­டத்­தக்க வகை­யில் பங்­காற்­றும் என்­றும் அனைத்­து­ல­கச் சமூ­கத்­தின் எதிர்­பார்ப்­புக்கு உரு­வம் கொடுக்­கும் என்­றும் அவர் டெல்­லி­யில் நடந்த செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் குறிப்­பிட்­டார்.

முன்­ன­தாக, இந்­தி­யா­வில் உற்­பத்­தி­யா­கும் கோவி­ஷீல்ட் தடுப்­பூ­சிக்கு அங்­கீ­கா­ரம் வழங்க பிரிட்­டன் அரசு மறுத்­தது. இது பார­பட்­ச­மான நட­வ­டிக்கை என்று இந்­தியா தனது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யது.

மேலும், பிரிட்­ட­னுக்கு எதி­ராக பரஸ்­பர எதிர் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யி­ருக்கும் என்­றும் எச்­ச­ரிக்கை விடுத்­தது.

இந்­நி­லை­யில், கொரோனா சான்­றி­தழை அங்­கீ­க­ரிப்­பது தொடர்­பில் உலக நாடு­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­வது குறித்து ஆலோ­சித்து வரு­வ­தாக மத்­திய அமைச்­சர் ராஜீவ் சந்­தி­ர­சே­கர் கூறி­யுள்­ளார்.

இந்­திய நில­வ­ரம்

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் நேற்று முன்­தி­னம் கொரோனா கிருமித்தொற்­றால் மேலும் 31,923 பேர் புதி­தாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ஒரே நாளில் மேலும் 282 பேர் இறந்­து­விட்­ட­னர். தற்­போது 301,640 பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

நாடு முழு­வ­தும் 830 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன. நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 7.1 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, கொரோனா கிரு­மித்­தொற்­றின் முதல், இரண்­டாம் அலை­யில் சிக்கி உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­தா­ருக்கு ஐம்­ப­தா­யி­ரம் ரூபாய் இழப்­பீடு வழங்­கப்­படும் என மத்­திய அரசு உச்ச நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!