இந்தியா: தீவிரவாதத்துக்கு இடமில்லை என்று கூறியதை தலிபான்கள் செயல்படுத்த வேண்டும்

1 mins read
c64b3712-5c42-4bda-8767-6bea5e938edd
ஜெய்சங்கர். படம்: ஊடகம் -

புது­டெல்லி: ஆப்­கா­னிஸ்­தான் மண்­ணில் தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­களுக்கு அனு­மதி இல்லை என்று கூறி­யதை தலி­பான்­கள் செயல்­ப­டுத்­திக் காட்ட வேண்­டும் என மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

ஆப்­கா­னிஸ்­தான் விவ­கா­ரம் தொடர்­பாக காணொளி வசதி மூலம் நடை­பெற்ற ஜி-20 வெளி­யு­றவு அமைச்­சர்­கள் கலந்­து­கொண்ட கூட்­டத்­தில் பேசி­ய­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

பரந்த, ஆப்­கா­னின் அனைத்­துத் தரப்பு பிர­தி­நி­தித்­து­வத்தை உள்­ள­டக்­கிய செயல்­பாட்டை தலி­பான்­களி­டம் இருந்து அனைத்­து­ல­கச் சமூ­கம் எதிர்­பார்ப்­ப­தாக ஜெய்­சங்­கர் கூறி­னார்.

"ஆப்­கான் மக்­க­ளின் மனி­தா­பி­மான தேவை­கள் தொடர்­பில் அனைத்­து­லக சமூ­கம் ஒருங்­கி­ணைந்து செய­லாற்ற வேண்­டும். உத­வி­களை வழங்­கு­வோர்க்கு எந்­த­வி­த­மான தடை­களும் கட்­டுப்­பா­டு­களும் விதிக்­கப்­ப­டக் கூடாது என்­ப­து­டன் நேர­டி­யாக மக்­களை அணுக அனு­ம­திக்க வேண்­டும்," என்று ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்­டத்­துக்­குப் பின் டுவிட்­ட­ரில் ஜெய்­சங்­கர் பதி­விட்­டார்.

ஆப்­கா­னிஸ்­தா­னில் எந்­த­வி­த­மான தீவி­ர­வா­தத்­தை­யும் அனு­ம­திக்­கப் போவ­தில்லை என்று தலி­பான்­கள் தரப்­பில் அண்­மை­யில் அறி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, சொன்­ன­தைச் செயல்­ப­டுத்­திக் காட்ட வேண்­டும் என இந்­தியா வலி­யு­றுத்தி உள்­ளது.

தலி­பான்­கள் விஷ­யத்­தில் இந்­திய வெளி­யு­றவு அமைச்சு பல்­வேறு வியூ­கங்­களை அமைத்து வரு­கிறது.

குறிப்­பாக, ஆப்­கா­னிஸ்­தா­னில் அமைந்­துள்ள புதிய அரசை அங்­கீ­க­ரிப்­ப­தில் உலக நாடு­கள் அவ­ச­ரப்­ப­டக் கூடாது என இந்­தியா வலி­யு­றுத்தி வரு­கிறது.