காதல் மணம் புரிந்தவர்களுக்கு நூதன தண்டனை: ஐவர் கைது

1 mins read
635a28aa-5c91-4fdc-a33b-f2a1709d6a86
-

ராஞ்சி: காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடிக்கு மத்தியப் பிரதேச கிராம மக்கள் நூதன தண்டனை கொடுத்துள்ளனர். இதையடுத்து, ஐந்து பேர் கைதாகினர்.

திருமணமான இளம் ஜோடி அண்மையில் கிராமத்துக்குத் திரும்பியது. அப்போது இருவரது கழுத்திலும் கார் சக்கரத்தை மாலை போல் தொங்கவிட்டு நடனமாடுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். மேலும், சிலர் சுற்றி நின்று இருவரையும் பிரம்பால் அடித்துள்ளனர். இது தொடர்பான காணொளிப் பதிவு சமூக வலைத்தளத்தில் வெளியானதை அடுத்து ஐந்து பேர் கைதாகினர்.