அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஆச்சரியப்படுத்திய தமிழர்

2 mins read
7f1fb4bc-22d5-48f0-9ced-bb5c12df050e
-

புதுடெல்லி: சென்­னை­யைச் சேர்ந்த கிரிஷ் மாத்­ரு­பூ­தத்­தின் (படம்) 'ஃப்ரெஷ் வொர்க்ஸ்' நிறு­வ­னம் அடைந்­துள்ள திடீர் வளர்ச்சி அமெ­ரிக்க தொழில் முனை­வோரை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்தி உள்­ளது.

இந்­நி­று­வ­னத்­தின் பங்­கு­க­ளின் மதிப்பு குறு­கிய காலத்­தில் 32 விழுக்­காடு அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ளது.

சென்­னை­யில் தனது நிறு­வ­னத்­தைத் தொடங்­கிய கிரிஷ், பின்­னர் தனது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அருகே இருந்­தால் நல்­லது என்ற எண்­ணத்­து­டன் அமெ­ரிக்­கா­வில் அலு­வ­ல­கம் அமைத்து செயல்­ப­டத் தொடங்­கி­னார்.

கொரோனா நெருக்­கடி வேளை­யில் பல்­வேறு நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்க பணி முறைக்கு மாற வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது கிரிஷ் நிறு­வ­னத்­தின் வளர்ச்­சிக்கு கைகொ­டுத்­துள்­ளது.

வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்ததால் நிறுவனத்தின் வருவாயும் கூடியது. இன்று 52,500 வாடிக்கையாளர்களுடன் நடப்பாண்டின் முதல் பாதியில் 'ஃப்ரெஷ் வொர்க்ஸ்' நிறுவனத்தின் வருமானம் 169 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

முந்­தைய ஆண்டு இதே கால­கட்­டத்­தில் இந்த வரு­மா­னம் 110 மில்­லி­யன் டால­ராக இருந்­தது. மேலும், ஓராண்­டுக்கு முன்பு 57 மில்­லி­யன் டாலர் நஷ்­டத்தை எதிர்­கொண்ட நிலை­யில், அது தற்­போது 9.8 மில்­லி­ய­னாக குறைந்­துள்­ளது.

ஒரு மில்­லி­யன் வரு­மா­னம் என்­ப­து­தான் தமது முதல் இலக்­காக இருந்­தது என்­கி­றார் கிரிஷ். எனி­னும், பின்­னர் சில திட்­டங்­களும் செயல்­பா­டு­களும் மாறி­ய­தில் அவ­ரது நிறு­வ­னத்­தின் பங்­கு­கள் மதிப்பு மள­ம­ள­வென அதி­க­ரித்­துள்­ளது.

தற்­போது அவ­ரது நிறு­வ­னத்­தின் சந்தை மதிப்­பா­னது 13 பில்­லி­ய­னாக அதி­க­ரித்­துள்­ளது.

"எங்கள் நிறுவனத்துக்கு விற்பனைப் பிரதிநிதிகள் யாரும் தேவைப்படவில்லை. காரணம், நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரும் செயலிதான் எங்களது விற்பனைப் பிரதிநிதி. இந்த வளர்ச்சி நீடிக்கும்," என்கிறார் இந்நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினரான சமீர் காந்தி.