அமரீந்தர் சிங்: பிரியங்கா, ராகுலுக்கு அனுபவம் இல்லை

அமரீந்தர் சிங்: பிரியங்கா, ராகுலுக்கு அனுபவம் இல்லை

1 mins read
844c57b9-7ed1-408b-9ff5-071c3cd4f5bc
-

சண்­டிகர்: காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்­தி­யும் அவ­ரது சகோ­தரி பிரி­யங்­கா­வும் அர­சி­யல் அனு­ப­வம் அற்­ற­வர்­கள் என பஞ்­சாப் முன்­னாள் முதல்­வர் அம­ரீந்­தர் சிங் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் செய்­தி­யாளர்­க­ளி­டம் பேசிய அவர், பஞ்­சாப் மாநி­லத்­துக்கு நவ்­ஜோத்­ சிங் சித்து போன்ற தலை­வர்­க­ளால் ஆபத்து மட்­டுமே ஏற்­படும் என்­றார்.

ராகுல் குறித்து அவர் தெரி­வித்­துள்ள கருத்து காங்­கி­ரஸ் கட்சி வட்­டா­ரங்­களில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

சித்­து­வும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் போர்க்­கொடி தூக்­கி­ய­தன் கார­ண­மா­கவே அம­ரீந்­தர் முதல்­வர் பத­வி­யில் இருந்து விலக நேரிட்­டது. அடுத்த சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் சித்து போட்­டி­யிட்­டால் அவரை தோற்­கடிக்க எத்­த­கைய தியா­கத்­தை­யும் செய்யத் தாம் தயாராக இருப்­ப­தாக கூறி­யுள்­ளார் அம­ரீந்­தர் சிங்.

சித்­து­தான் முதல்­வர் வேட்­பா­ளர் என்று கூறப்­ப­டு­வதை ஏற்க இய­லாது என்­றும் தேர்­தல் களத்­தில் அவ­ருக்கு எதி­ராக வலுவான வேட்­பா­ளரை தாம் கள­மி­றக்­கப் போவது உறுதி என்­றும் அம­ரீந்­தர் கூறி­னார்.

"மூன்று வாரங்­க­ளுக்கு முன்பே நான் பதவி வில­கத் தயார் என்று கூறி­விட்­டேன். ஆனால் சோனியா காந்தி தான் பத­வி­யில் நீடிக்­கு­மாறு கூறி­னார். ராகு­லும் பிரி­யங்­கா­வும் அனு­ப­வம் இல்­லா­த­வர்­கள் என்­ப­தால் ஒரு­சி­லர் இரு­வ­ரை­யும் தவ­றாக வழி­ந­டத்­து­கி­றார்­கள்," என்­றார் அமரீந்­தர் சிங்.