திருவனந்தபுரம்: கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் வரதட்சணை வாங்கியதாக நிரூபணமானால் அவர்களது பட்டம் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வரதட்சணைக் கொடுமைகள் அதிகரித்து வருவதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.
"கேரளாவில் அண்மையில் வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட குடும்ப வன்முறையால் மரணங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்ததை அடுத்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் இந்த யோசனையை முன்மொழிந்துள்ளார்.
"மாணவர் சேர்க்கையின்போது அளிக்கப்படும் படிவத்தில் ஒவ்வொரு மாணவரும் பெற்றோரும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெறவோ மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும்," என அனைத்துக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"உறுதிமொழியை மீறி வரதட்சணை வாங்கினால் எனது பட்டத்தைத் திரும்பப் பெறலாம் அல்லது பட்டமே அளிக்காமல் இருக்கலாம்.
"மாணவர் சேர்க்கையை ரத்து செய்யலாம்," என்றும் சேர்க்கைப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.