ஒட்டுக்கேட்பு விவகாரம்: நிபுணர் குழு அமைக்கப்படும்

ஒட்டுக்கேட்பு விவகாரம்: நிபுணர் குழு அமைக்கப்படும்

1 mins read
2bd9d5b8-1b1d-4e83-9bd9-22ac3fbefda0
-

புது­டெல்லி: தொலை­பேசி ஒட்­டுக்­கேட்பு தொடர்­பாக நிபு­ணர் குழு அமைத்து விசா­ரிக்­கப்­படும் என உச்ச நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

நிபு­ணர் குழு குறித்து அடுத்த வாரம் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும் என உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி ரமணா கூறி­யுள்­ளார்.

நாட்­டில் உள்ள முக்­கிய அர­சி­யல் தலை­வர்­கள், சமூக ஆர்­வ­லர்­கள், செய்­தி­யா­ளர்­கள் உள்­ளிட்ட பல­ரது கைபே­சி­கள் ஒட்­டுக்­கேட்­கப்­பட்­ட­தாக அண்­மை­யில் பர­ப­ரப்பு தக­வல்­கள் வெளி­யா­னது.

மத்­திய அரசு இதை மறுத்த நிலை­யில், எதிர்க்­கட்­சி­கள் விடு­வ­தாக இல்லை. இந்த விவ­கா­ரம் தொடர்­பாக சுதந்­தி­ர­மான விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என வலி­யு­றுத்­தின.

இந்­தப் பிரச்­சினை கார­ண­மாக நாடா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­கள் சில நாள்­கள் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்­கின.

மேலும், இது குறித்து விசா­ரிக்க வலி­யு­றுத்தி உச்ச நீதி­மன்­றத்­தில் பொது­நல மனுக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன.

இந்நிலையில், இம்மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி உட்பட மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, நிபுணர் குழு குறித்து அடுத்த வாரம் விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

குழுவில் தாங்கள் நியமிக்க இருந்த சில நிபுணர்கள் அதற்கு மறுத்துவிட்டதால் சற்று கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.