நேரடி வரி வருவாய் 74 விழுக்காடு அதிகரிப்பு: நேரடி வரிகள் வாரியம் தகவல்

நேரடி வரி வருவாய் 74 விழுக்காடு அதிகரிப்பு: நேரடி வரிகள் வாரியம் தகவல்

1 mins read
55f003b3-583b-4d06-b97e-0bc1352edfbb
-

புது­டெல்லி: கொரோனா நெருக்­க­டி­யில் இருந்து நாடு மெல்ல மீண்டு வரும் நிலை­யில், நடப்பு நிதி­யாண்­டில் நேரடி வரி வரு­வாய் 74 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ள­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக மத்­திய நேரடி வரி­கள் வாரி­யம் வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், நடப்­பாண்­டில் இது­வரை ரூ.5.7 லட்­சம் கோடி நேரடி வரி­கள் மூலம் வசூ­லாகி உள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

2021 ஏப்­ரல் முதல் தேதி­யில் இருந்து செப்­டம்­பர் 22ஆம் தேதி வரை­யி­லான கால­கட்­டத்­தில் நேரடி வரி­யாக ரூ.570,568 கோடி வசூ­லா­ன­தா­க­வும் கடந்த ஆண்டு இதே கால­கட்­டத்­தில் 3.27 லட்­சம் கோடி ரூபாய் மட்­டுமே வசூ­லா­ன­தா­க­வும் அவ்­வா­ரி­யம் தெரி­வித்­தது.

இது முந்­தைய ஆண்­டை­விட 74.4 விழுக்­காடு அதி­கம் என்று குறிப்­பிட்­டுள்ள மத்­திய நேரடி வரி­கள் வாரி­யம், 2019-2020ஆம் நிதி­யாண்டைவிட­ 27 விழுக்­காடு அதி­கம் என்று சுட்­டிக்­காட்டி உள்­ளது.

"மொத்த நேரடி வரி வசூல் நடப்பு நிதி­யாண்­டில் இது­வரை ரூ.6.45 லட்­சம் கோடி­யாக உள்­ளது. இது முந்­தைய ஆண்டை விட 47 விழுக்­காடு அதி­கம். இதே போல் 2019-20 நிதி­யாண்டை விட 16.75 விழுக்­காடு அதி­கம்.

"இதே­போல் நடப்பு நிதி­யாண்­டின் முதல், இரண்­டாம் அரை­யாண்­டு­க­ளுக்­கான முன்­கூட்­டிய வரி வசூல் ரூ.253,353 கோடி­யாக உள்­ளது.

"இது முந்­தைய நிதி­யாண்டை விட 56 விழுக்­காடு அதி­கம்," என மத்­திய நேரடி வரி­கள் வாரி­யம் தெரி­வித்­துள்­ளது.