நாடு தழுவிய விவசாயிகளின் வேலைநிறுத்தம் இன்று; காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

நாடு தழுவிய விவசாயிகளின் வேலைநிறுத்தம் இன்று; காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

2 mins read
f5616872-0aa7-4905-903b-3862f83b63f7
-

புது­டெல்லி: இந்­திய விவ­சா­யி­கள் இன்று நாடு தழு­விய போராட்டத்­துக்கு அழைப்பு விடுத்­துள்­ள­னர். இதற்கு முக்­கிய அர­சி­யல் கட்­சி­கள் தங்­க­ளு­டைய ஆத­ரவைத் தெரி வித்­துள்­ளன.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் மூன்று வேளாண் சட்­டங்­கள் கொண்டு வரப்­பட்­டன. இந்­தச் சட்­டங்­கள் மூலம் 'கார்ப்­ப­ரேட்' நிறு­வ­னங் ­களுக்கு கீழ் விவ­சா­யி­கள் கொண்டு வரப்­ப­டு­வார்­கள் என்று கூறி விவ­சா­யி­கள் தொடர்ந்து போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.

உச்ச நீதி­மன்­றம் கடந்த ஜன­வரி மாதம் இந்த மூன்று வேளாண் சட்­டங்­க­ளை­யும் நடை­மு­றைப்­ப­டுத்த இடைக்­கா­லத் தடை விதித்­தது.

மேலும், இந்­தப் பிரச்­சி­னையை முடி­வுக்கு கொண்டு வர அது ஒரு குழுவை நிய­மித்­துள்­ளது.

இந்த நிலை­யில் மத்­திய அர­சைக் கண்­டித்து போராட்­டம் நடத்தி வரும் விவ­சா­யி­கள் நாடு தழு­விய வேலை நிறுத்­தத்­திற்கு அழைப்பு விடுத்­துள்­ள­னர்.

இதற்கு ஆதரவு அளிக்கப்படும் என்று முக்கிய எதிர்க்கட்சியான காங்­கி­ரஸ் அறிவித்துள்ளது.

அக்­கட்­சி­யின் செய்­தித் தொடர்­பா­ளர் கௌரவ் வல்­லாப் கூறு­கை­யில் "விவ­சா­யி­கள் மற்­றும் விவ­சாய சங்­கங்­க­ளால் செப்­டம்­பர் 27ஆம் தேதி (இன்று) அமை­தி­யான முறை­யில் நடை­பெ­ற­வுள்ள இந்த வேலை நிறுத்­தத்­திற்கு காங்­கி­ரஸ் கட்­சி­யின் அனைத்து உறுப்­பி­னர்­களும் ஆத­ரவு அளிப்­பார்­கள்," என்றார்.

கடந்த ஒன்பது மாதங்­க­ளாக போராடி வரும் விவ­சா­யி­க­ளி­டம் மத்­திய அரசு பேச்­சு­வார்த்­தை நடத்த வேண்டும். அரசு கொண்டு வந்­துள்ள மூன்று வேளாண் சட்­டங்­க­ளை­யும் திரும்பப் பெற வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

"2022ஆம் ஆண்­டுக்­குள் விவ­சா­யி­க­ளின் வரு­மா­னத்தை இரட்­டிப்­பாக்கப் போவ­தாக பிர­த­மர் மோடி கூறி­யது பொய்­யா­னது. 2012-2013ஆம் ஆண்­டு­களில் விவ­சா­யத்­தின் மூலம் விவ­சா­யி­க­ளுக்கு கிடைத்த வரு­மா­னத்தைவிட 2018-2019ஆம் ஆண்­டு­களில் கிடைத்த வரு­வாய் கணி­ச­மாகக் குறைந்­துள்­ளது," என்­றும் அவர் தெரி­வித்­தார்.

விவ­சா­யி­க­ளின் வேலை ­நி­றுத்த போராட்­டத்­துக்கு முதல்­வர் ஒய்­எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தலை­மை­யி­லான ஆந்­திரா அர­சாங்­கம், ஆம் ஆத்மி கட்சி, தெலுகு தேசம் உட்­பட எதிர்க்­கட்­சி­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.