சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு கோரி 33 தலைவர்களுக்கு தேஜஷ்வி யாதவ் கடிதம்

2 mins read
dc451354-7f98-41dc-8db0-8d80ff4907ef
-

புது­டெல்லி: சாதி­வாரி மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பு நடத்­தக்­கோ­ரும் கோரிக்­கைக்கு ஆத­ரவு அளிக்­கு­மாறு தமி­ழக முத­ல்வர் மு.க. ஸ்டா­லின் உட்­பட 33 தலை­வர்­க­ளுக்கு பீகார் எதிர்க்­கட்­சித் தலை­வர் தேஜஷ்வி பிரசாத் யாதவ் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

சாதி வாரி கணக்­கெ­டுப்பு நடத்த மறுப்பு தெரி­விக்­கும் மத்­திய அரசு அதற்­கான உரிய கார­ணத்தை தெரி­விக்­க­வில்லை என்று தனது கடி­தத்­தில் தேஜஷ்வி யாதவ் சுட்­டிக் ­காட்­டி­யுள்­ளார்.

"இந்த விவ­கா­ரத்­தில் அனைத்து எதிர்க்­கட்­சி­களும் ஒரு­மித்த குரல் எழுப்ப வேண்­டும்," என்று வலி­யு­றுத்­திய அவர், காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்தி, முதல்­வர்­க­ளான மம்தா பானர்ஜி, பின­ராயி விஜ­யன், அர­விந்த் கெஜ்­ரி­வால், உத்­தவ் தாக்­கரே, நவீன் பட்­நா­யக் உள்­ளிட்ட 33 தலை­வர்­க­ளுக்கு கடி­தம் மூலம் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

முன்­ன­தாக சாதி­வாரி கணக்­கெ­டுப்பு நடத்த வாய்ப்­பில்லை என்று மத்­திய அரசு தெரி­வித்­தி­ருந்­தது. இதை­ய­டுத்து பீகார் முதல்­வர் நிதீஷ்­கு­மார் மற்­றும் எதிர்க்­கட்சித் தலை­வர் தேஜஷ்வி யாதவ் உட்­பட பீகா­ரைச் சேர்ந்த 11 கட்­சித் தலை­வர்­கள் கூட்­டாக பிர­த­மரை சந்­தித்து சாதி­வாரி கணக்­கெ­டுப்பு நடத்த கோரிக்கை விடுத்­த­னர்.

இதற்­கி­டையே பாட்­டாளி மக்­கள் கட்சி நிறு­வ­னர் டாக்­டர் ராம­தாஸ், இந்­தி­யா­வில் சாதி­வாரி மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பு அவ­சி­ய­மா­னது, தவிர்க்க முடி­யா­தது என்று கூறி­யுள்­ளார்.

"சாதி­கள் திடீ­ரென்று உரு­வாகி விட­வில்லை. காலம் கால­மாக மக்­கள் செய்­யும் தொழில்­கள், பாகு­பா­டு­கள் கார­ண­மா­கவே சாதி­கள் உரு­வா­யின. ஏற்­றத்­தாழ்­வு­க­ளை­யும் சாதி சார்ந்து தொழில் செய்­யும் முறை­யை­யும் ஒழித்து சமத்­து­வ­மான சமு­தா­யம் அமைத்­தால்தான் சாதி­யற்ற சமு­தா­யத்தை உரு­வாக்க முடி­யும். "அதற்கு அனைத்து சமூ­கங்­களும் முன்­னேற வேண்­டும். அதற்­கான அடிப்­படை இட­ஒ­துக்­கீடு என்­ப­தால் அதை உறுதி செய்ய சாதிவாரி மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பு அவ­சி­யம் என்­பதை மத்­திய அரசு உணர வேண்­டும்," என்று டாக்­டர் ராம­தாஸ் கூறி உள்ளார்.