செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
b3f1c625-712b-48bf-aa3e-f5ca0ab9d140
-

கனடா - இந்தியா நேரடி

விமானச் சேவைக்கு அனுமதி

ஒட்டாவா: கிருமித்தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை கனடா விலக்கியிருக்கிறது. செப்டம்பர் 27ஆம் தேதியிலிருந்து (இன்று) இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள் கனடாவில் தரையிறங்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மோடியின் சொத்து மதிப்பு

ரூ.22 லட்சம் அதிகரிப்பு

புதுடெல்லி: நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்றது முதல் பிரதமரின் இணையத்தளத்தில் ஆண்டுதோறும் தனது சொத்து விவரங்களைப் பதிவிட்டு வருகிறார். அதன்படி 2020-2021ஆம் நிதியாண்டுக்கான பிரதமர் மோடியின் சொத்து விவரங்கள் தற்போது வெளியிடப் பட்டுள்ளது. அவரது சொத்து மதிப்பு முந்தைய ஆண்டைவிட 22 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது. பிரதமர் மோடியின் மொத்த சொத்து மதிப்பு 3.07 கோடி ரூபாய். கடந்த மார்ச் 31 உடன் முடிந்த நிதி ஆண்டின்படி அவரது பெயரில் வங்கியில் 1.5 லட்சம் ரூபாய் முதலீடுகளும் 36.000 ரூபாய் ரொக்கமும் கையிருப்பு உள்ளன. குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அவர் செய்துள்ள நிரந்தர முதலீடு 1.64 கோடி ரூபாயில் இருந்து 1.86 கோடி ரூபாயாக உள்ளது. அவருக்கு எந்தக்கடனும் இல்லை.