துப்பாக்கிச் சூடு விவகாரம்; 107 ரவுடிகள் கைது

துப்பாக்கிச் சூடு விவகாரம்; 107 ரவுடிகள் கைது

1 mins read
2cfbee9d-c402-46bb-b8f3-235e1d32c44a
-

புதுடெல்லி: டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் கடந்த 24ஆம் தேதி வழக்கறிஞர் போல வந்த எதிரிகள் பிரபல தாதாவான ஜிதேந்தர் கோகியை நோக்கிச் சுட்டதில் அவர் கொல்லப்பட்டார். நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்துவதற்காக போலிசார் கோகியை அழைத்து வந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது போலி சாருக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் கோகி உட்பட மூவர் கொல்லப் பட்டனர். வழக்கறிஞர்போல வந்த இருவரும் உயிரிழந்த னர். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதில் தொடர்புடைய 26 ரவுடி கும்பல்கள் அடையாளம் காணப்பட்டு 107 பேரை போலிசார் கைது செய்து உள்ளனர். போதைப்பொருள் கடத்தல், ஆயுதக்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் கும்பல்களை அடையாளம் கண்டுபிடித்து பலரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று டெல்லி குற்றப்பிரிவு இைணக்காவல் ஆணையாளர் அலோக்குமார் தெரிவித்தார்.