இத்தாலி மாநாட்டில் பங்கேற்க அனுமதி மறுப்பு; மோடிக்கு பொறாமை என்கிறார் மம்தா பானர்ஜி

கோல்­கத்தா: இத்­தா­லி­யில் அடுத்த மாதம் நடக்­க­வுள்ள உலக அமைதி மாநாட்­டில் பங்­கேற்க தனக்கு மத்­திய அரசு அனு­மதி வழங்க மறுத்து­ விட்­ட­தாக மேற்­கு­வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி தெரி­வித்­து உள்­ளார்.

ரோமில் நடக்­க­வுள்ள உலக அமைதி மாநாட்­டில் போப் பிரான்­சிஸ், ஜெர்­மன் பிரதமர் ஏஞ்­சலா மெர்க்­கல் ஆகி­யோ­ரு­டன் பங்­கேற்க மம்தா பானர்ஜி அழைக்­கப்­பட்­டார்.

இது தொடர்­பாக பேசிய மம்தா பானர்ஜி, "ரோமில் உலக அமைதி பற்­றிய மாநாட்­டில் பங்­கேற்க நான் அழைக்­கப்­பட்­டேன்.

"இம்­மா­நாட்­டில் கலந்­து­கொள்ள எனக்கு இத்­தாலி சிறப்பு அனு­மதி அளித்­தது.

"ஆனால் மத்­திய அரசு இதற்கு அனு­ம­தி­ய­ளிக்க மறுத்­து­விட்­டது. முத­ல­மைச்­ச­ருக்கு இது சரி­யல்ல என்று மத்­திய அரசு கூறி­யுள்ளது," என்­றார்.

"உங்­க­ளால் என்­னைத் தடுக்க முடி­யாது. நான் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்ல விரும்­ப­வில்லை. ஆனால் இது தேசத்­தின் மரி­யா­தை­யைப் பற்­றி­யது.

ஞபிர­த­மர் மோடி இந்­துக்­க­ளைப் பற்றி பேசிக்­கொண்டே இருக்­கி­றார். நானும் ஓர் இந்­துப் பெண், ஏன் என்னை இந்தக் கூட்­டத்­துக்கு அனு­ம­திக்­க­வில்லை? நீங்­கள் முற்­றி­லும் பொறா­மைப்­ப­டு­கி­றீர்­கள் பிர­த­மர் மோடி," என்று மேலும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து திரி­ணா­முல் காங்­கி­ரஸ் செய்­தித் தொடர்­பா­ளரான தேபாங்சு பட்­டாச்­சார்யா தேவ் தமது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

"முன்­ன­தாக மத்­திய அரசு மம்தா பானர்­ஜி­யின் சீனா பய­ணத்­தின் அனு­ம­தி­யை­யும் ரத்து செய்­த­னர். அனைத்­து­லக உற­வு­கள், இந்­தி­யா­வின் நலன்­களை மன­தில் கொண்டு அந்த முடிவை நாங்­கள் ஏற்­றுக்­கொண்­டோம். இப்­போது ஏன் இத்­தா­லிக்­கும் அனு­மதி மறுக்­கி­றீர்­கள் மோடி ஜி?" என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

இது குறித்து மத்­திய அரசு இது ­வரை கருத்து எதுவும் தெரிவிக்க வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!