விவசாயிகள் போராட்டம்: முடங்கிய மாநிலங்கள் 6 மாநில அரசுகள் ஆதரவு; 500 விவசாய சங்கங்கள் பங்கேற்பு

புது­டெல்லி: மத்­திய அர­சின் புதிய வேளாண் சட்­டங்­களை எதிர்த்து விவ­சா­யி­கள் நாடு தழு­விய அள­வில் நடத்­திய முழு அடைப்­புப் போராட்­டத்­தால் பல்­வேறு மாநி­லங்­களில் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டது.

பல்­வேறு அர­சி­யல் கட்­சி­க­ளின் ஆத­ர­வோடு நடை­பெற்ற இந்­தப் போராட்­டத்­துக்கு நாற்­பது விவ­சாய சங்­கங்­களை உள்­ள­டக்­கிய சம்­யுக்தா கிஸான் என்ற விவ­சாய கூட்­ட­மைப்பு அழைப்பு விடுத்­தது.

காங்­கி­ரஸ், சமாஜ்­வாடி, பகு­ஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்­ரீய ஜன­தா­தளம், ஆம் ­ஆத்மி, கம்­யூ­னிஸ்ட் கட்­சி­கள் எனப் பெரும்­பா­லான எதிர்க்­கட்­சி­களும் சில மாநில கட்சி­களும் விவ­சா­யி­க­ளுக்கு ஆத­ரவு அளித்­தன. அதே­போல், தமி­ழ­கம், சத்­தீஸ்­கர், கேரளா, பஞ்­சாப், ஜார்க்­கண்ட், ஆந்­திரா ஆகிய மாநில அர­சு­க­ளின் ஆத­ர­வும் கிடைத்­தது.

நாடு முழு­வ­தும் உள்ள ஐநூ­றுக்­கும் மேற்­பட்ட விவ­சா­ய சங்­கங்­கள் போராட்­டத்­தில் பங்­கேற்­றன. நேற்று காலை ஆறு மணி முதல் மாலை நான்கு மணிவரை நீடித்த இந்­தப் போராட்­டத்­தின்­போது விவ­சா­யி­கள் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

தலை­ந­கர் டெல்­லி­யில் உள்ள முக்­கிய சாலை­கள் அனைத்­தி­லும் விவ­சா­யி­கள் திர­ளா­கக்­கூடி மறி­ய­லில் ஈடு­பட்­ட­தால் போக்­கு­வ­ரத்து முடங்­கி­யது. டெல்லி, உத்­த­ரப்­பிரதேச மாநி­லங்­களை இணைக்­கும் நெடுஞ்­சா­லை­யி­லும் மறி­யல் நடந்­தது. டெல்லி, ஹரி­யா­னா­வில் உள்ள கடை­கள், தொழிற்­சா­லை­கள், கல்வி நிலை­யங்­கள் அனைத்­தும் மூடப்­பட்ட நிலை­யில், சில மெட்ரோ ரயில் நிலை­யங்­களும் மூடப்­பட்­டன.

பாஜக ஆளும் உத்­த­ரப் பிரதே­சத்­தில் மறி­யல் போராட்­டம் கார­ண­மாக பல்­வேறு நக­ரங்­களில் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டது.

பீகார், ராஜஸ்­தான், பஞ்­சாப் உள்­ளிட்ட மேலும் சில வட மாநிலங்­களும் முடங்­கின. கேர­ளா­வில் பல தொழிற்­சங்­கங்­க­ளின் ஆத­ர­வோடு முழு அடைப்­புப் போராட்­டம் வெற்றி­ பெற்­ற­தாக விவ­சாய சங்­கங்­கள் தெரி­வித்­தன. நேற்று நடந்த போராட்­டத்­தின் மூலம் விவ­சா­யி­க­ளின் குரல் செவி­ம­டுக்­கப்­பட வேண்­டும் எனும் கட்­டா­யம் மத்­திய அர­சுக்கு ஏற்­பட்­டி­ருக்­கும் என விவ­சாய சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­புத் தலை­வர் ராகேஷ் திகா­யத் தெரி­வித்­துள்­ளார்.

விவ­சா­யி­க­ளின் கோரிக்­கை­கள் சட்­டத்­துக்­குட்­பட்­டவை என டெல்லி முதல்­வர் கெஜ்­ரி­வால் கூறி­யுள்­ளார்.

அசாம், அரு­ணாச்­ச­லப் பிர­தே­சம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் விவ­சாயி­க­ளின் போராட்­டத்­துக்கு ஆத­ரவு கிடைக்­க­வில்லை என ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!