கோவில் நிலத்தைக் காப்பாற்றிய முஸ்லிம்கள்

கோவில் நிலத்தைக் காப்பாற்றிய முஸ்லிம்கள்

1 mins read
4f124686-7c07-4c38-966e-c6b13a90e5ef
-

புது­டெல்லி: கோவில் நிலத்தை ஆக்­கி­ர­மித்து கட்­ட­டம் எழுப்ப திட்­ட­மிட்ட தனி­யார் தரப்­புக்கு எதி­ராக நீதி­மன்­றத்தை அணு­கிய முஸ்லிம்க­ளுக்குப் பாராட்­டு­கள் குவிந்­துள்­ளன.

டெல்­லி­யில் உள்ள ஜாமியா நக­ரில் ஏரா­ள­மான முஸ்லிம் குடும்­பங்­க­ளுக்கு மத்­தி­யில் சுமார் ஐம்­பது இந்து குடும்­பங்­கள் வசிக்­கின்­றன.

இங்­குள்ள ஒரே­யொரு இந்துக் கோவி­லுக்­குச் சொந்­த­மான நிலத்தை தனி­யார் நிறு­வ­னம் ஆக்­கி­ர­மித்துக் கட்­ட­டம் எழுப்ப முயன்­றது. இதை அறிந்த அப்பகுதி முஸ்லிம்கள் நீதி­மன்­றத்தை அணு­கி­னர்.

"நாங்­கள் பல ஆண்­டு­க­ளாக ஒற்­று­மை­யாக வாழ்ந்து வரு­கி­றோம். எங்­க­ளுக்­குள் மோதலை உண்­டாக்கி ஆதா­யம் தேட தனி­யார் நிறு­வ­னம் முயற்சி செய்­கிறது.

"எங்­க­ளது சகோ­த­ரத்­து­வத்தை பாதிக்­கும் செயல்­பாட்டை தடுத்து நிறுத்த வேண்­டும். காவல்­துறை, மாந­க­ராட்­சி­யில் பலமுறை புகார் அளித்­தும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. கோவில் நிலத்­தைக் காப்­பாற்ற வேண்­டும்," என இஸ்­லா­மி­யர்­கள் தாக்­கல் செய்த மனு­வில் கூறப்­பட்­டுள்­ளது.

கோவில் நிலத்­தில் எந்­த­வித கட்­டு­மா­னத்­துக்­கும் அனு­மதி அளிக்­க­வில்லை என்று மாந­க­ராட்சி நிர்­வா­க­மும் ஆக்­கி­ர­மிப்பு எதை­யும் அனு­ம­திக்­கா­மல் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று காவல்­து­றை­யும் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தன.

அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஜாமியா நகர் பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.